Cinema History
கலைஞர் மகனுக்கு வாலி எழுதிய பாடல்!.. கடுப்பாகி எம்.ஜி.ஆர் கேட்ட அந்த கேள்வி…
MGR Vaali: தமிழ் சினிமாவில் 50,60களில் முடிசூடா மன்னனாக இருந்தவர் எம்.ஜி.ஆர். நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்து அதிலும் யாரும் பிடிக்க முடியாத இடத்தை பிடித்தவர். அப்போது கதையம்சம் கொண்ட செண்டிமெண்டான கதைகளில் சிவாஜி உட்பல பலரும் நடித்துக்கொண்டிருந்தபோது ஆக்ஷன் கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
தனக்கென ஒரு தனி பாணி, தனி உடல்மொழியை கடைபிடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளை, உலகம் சுற்றும் வாலிபன், அடிமை பெண், அன்பே வா என விதவிதமான வேடங்களில் நடித்தவர் இவர்.
இதையும் படிங்க: தியேட்டருக்கு வந்த சிக்கல்!.. நாகேஷ் சொன்ன முதலிரவு கதை!.. எம்.ஜி.ஆர் எடுத்த நடவடிக்கை!..
எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிகராக வளரும்போது வசனகர்த்தாவாக திரையுலகில் நுழைந்தவர் கலைஞர் கருணாநிதி. எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்த முதல் படமான ராஜகுமாரியில் வசனம் எழுதியதும் கலைஞர்தான். அதன்பின் எம்,ஜி.ஆர் நடித்த அபிமன்யூ, மந்திரகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களுக்கு கருணாநிதியே வசனம் எழுதினார்.
ஆனால், ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆருகும், கருணாநிதிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. ஆனாலும், இருவரும் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. எம்.ஜி.ஆருக்கு எதிராக கருணாநிதி தனது மகன் மு.க.முத்துவை சினிமாவில் ஹீரோவாக நடிக்க வைத்தார்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் பாட்டுக்கு வந்த சோதனை! வாலி எழுதிய பாடலை அபத்தம் என்று சொன்ன கண்ணதாசன்!
கலைஞரின் சொந்த தயாரிப்பில் முக முத்து பிள்ளையோ பிள்ளை என்கிற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தின் படப்பிடிப்பை எம்.ஜி.ஆர்தான் கிளாப் அடித்து துவக்கி வைத்தார். ஆனால், படம் முடிந்த பார்த்தபோது மு.க முத்துவின் நடை, உடை, பாவணை என எல்லாமே எம்.ஜி.ஆரை போலவே இருப்பதை உணர்ந்தார். இது தனக்கு எதிராக பின்னப்பட்டவலை என்பதை புரிந்துகொண்டார். மு.க.முத்துவிடம் ‘நீ உனக்கென ஒரு தனி பாணியை ஃபாலோ பண்ணு’ என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
அந்த படத்தில் பாடல் எழுதிய வாலி ஒரு பாடலில் ‘மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ.. நீ மூவேந்தர் வழிவந்த மன்னவனோ’ என எழுதியிருந்தார். இதைப்பார்த்த எம்.ஜி.ஆர் மறுநாள் வாலியை நேரில் அழைத்து ‘என்ன வாலி மூன்று தமிழ் தோன்றியது முத்துவிடமா?’ எனக் கேட்க வாலிக்கு பிரிந்துவிட்டது.
அண்ணே.. முத்து வளர வேண்டிய பையன். வாழ்த்தி பாடுங்கன்னு கலைஞர் சொன்னார். என்னுடைய தமிழ் எல்லோரையும் வாழவைக்கணும்னு நீங்களே பலதடவ சொல்லி இருக்கீங்க.. அதனாலதான் அப்படி எழுதினேன்’ என எம்.ஜி.ஆரை சமாதானம் செய்தார்.
இதையும் படிங்க: சிவாஜியை கலாய்த்து பாடல் எழுதிய வாலி!.. கோபத்தின் உச்சிக்கே போன எம்.ஜி.ஆர்..