Cinema History
கோபத்தில் கங்கை அமரன் என்னை பழிவாங்கினார்!.. டைம் பாத்து அடிச்ச கவிஞர் வாலி!..
சினிமாவில் காசு இருந்தால் தயாரிப்பாளர் ஆகிவிடலாம். ஆனால், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் போன்ற வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமெனில் போராட வேண்டும். பாரதிராஜா முதல் இது எல்லோருக்கும் நடந்துள்ளது. இளையராஜா கூட சில வருடங்கள் போராடித்தான் வாய்ப்பை பெற்றார்.
சினிமாவில் பாட்டு எழுதுவதற்கும் அப்படித்தான். கண்ணதாசன் திரையுலகில் கோலோச்சிய போது வாலி பாடல் எழுத வந்தார். சென்னையில் ஒரு இடத்தில் அறை எடுத்து தங்கி வாய்ப்பு தேடினார். நடிகர் நாகேஷும் அவருடன் தங்கியே சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார்.
இதையும் படிங்க: அவர் இல்லனா நான் இல்ல!.. வாலிக்கு தக்க சமயத்தில் உதவிய பாடகர் பற்றி தெரியுமா?…
ஆனால், இருவருக்குமே வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் சினிமாவை விட்டே போய் விடலாம் என வாலி நினைத்தபோது கண்ணதாசன் எழுதிய ‘மயக்கமா கலக்கமா’ பாடல்தான் அவருக்கு மீண்டும் நம்பிக்கையை கொடுத்து இயங்க வைத்தது. அதன்பின் மெல்ல மெல்ல வாய்ப்புகள் கிடைத்து முன்னணி பாடலாசிரியராக வந்து கண்ணதாசனுக்கே டஃப் கொடுத்தார்.
பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை எழுதியிருக்கிறார் கண்ணதாசன். அதில், கங்கை அமரனும் ஒருவர். அவரின் அண்ணன் இளையராஜா பீக்கில் இருந்தபோதே கங்கை அமரனும் சில படங்களுக்கு இசையமைத்தார். அவரின் இசையிலும் கவிஞர் வாலி பாடல்களை எழுதியிருக்கிறார்.
இதையும் படிங்க: நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?!.. கோபப்பட்ட வாலிக்காக விழாவை கேன்சல் பண்ண சொன்ன எம்.ஜி.ஆர்!..
ஒருமுறை மேடையில் பேசிய வாலி ‘என்னிடம் உதவியாளராக சேர வேண்டும் என அமர்சிங் என்கிற பெயரில் ஒருவர் தொடர்ந்து கடிதம் எழுதினார். அவருக்கு நான் வாய்ப்பு கொடுக்கவில்லை. அந்த அமர்சிங்தான் இந்த கங்கை அமரன் என்பது பின்னால்தான் எனக்கு தெரிய வந்தது.
அவர் இசையமைத்த வாழ்வே மாயம் படத்தில் நான் பாடல் எழுதினேன். அவருக்கு வாய்ப்பு கொடுக்காத கோபத்தை நான் எழுதிய பாடல்களின் வரிகள் சரியில்லை என சொல்லி பழி வாங்கினார். ஆனால், திறமையான இசையமைப்பாளர்’ என கங்கை அமரனை வாலி பாராட்டி பேசினார்.