படுத்தே விட்ட ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாக்ஸ் ஆபிஸ்!.. பொங்கலுக்கும் இதே நிலைமை தானா?..
தீபாவளி ரிலீஸாக வெளியான ஜப்பான் படமும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் பாக்ஸ் ஆபிஸில் படுத்தே விட்டது. பிரபலங்களை வைத்து ட்வீட் போட வைத்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றிப் படமாக காட்ட முயற்சிப்பதாகவும். ஆனால், அந்த படத்தின் வசூலும் பெரும் ஏமாற்றம் தான் தயாரிப்பு நிறுவனத்துக்கு எனக் கூறுகின்றனர்.
இதுவரை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் 22 கோடி வசூலும், ஜப்பான் படம் 13 கோடி வசூலும் ஈட்டியிருப்பதாக கூறுகின்றனர். பல இடங்களில் ஜப்பான் படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டும், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கு 20 பேர் தான் ஒரு ஷோவுக்கே வருவதாகவும் செய்யாறு பாலு உள்ளிட்டோர் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: விஷ்ணு விஷாலை துரத்திய சூப்பர்ஸ்டார் சர்ச்சை!.. ஓவரா அடிக்காதீங்க என விளக்கம் கொடுத்த லால் சலாம் ஹீரோ!..
ரஜினிகாந்த், விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் படங்கள் வராதது தான் இதற்கு காரணம் என்கின்றனர். இதே நிலைமை தான் பொங்கல் பண்டிகைக்கும் நீடிக்கும் என்கிற அதிர்ச்சி தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன.
பொங்கலுக்கு ரஜினிகாந்த் கேமியோவாக நடித்துள்ள லால் சலாம், தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் சுந்தர். சியின் அரண்மனை 4 உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.
இதையும் படிங்க: 4 நாள்ல ஜப்பான் கதை கந்தல்!.. ஜிகர்தண்டா நிலைமை படுமோசம்.. இதுலாம் தீபாவளி வின்னரா?
ஆனால், பொங்கலுக்கும் விஜய், அஜித் படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில், மக்கள் பெரிய அளவில் தியேட்டருக்கு படையெடுக்க மாட்டார்கள் என்றும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் தான் குறைந்த காட்சிகள் மட்டுமே வருவார் என்பதால் அதுவும் அவர் படமில்லை.
தனுஷின் கேப்டன் மில்லர் மட்டுமே ஒரே நம்பிக்கை என்றும் சிவகார்த்திகேயனின் அயலான் பல ஆண்டுகள் உருவானதால் பழைய படமாக இருக்கும் என்றும் கூறுகின்றன்ர்.
அருண் மாதேஸ்வரன் இதற்கு முன்னதாக இயக்கிய ராக்கி மற்றும் சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்கள் பெரிதாக மக்களை கவராத நிலையில், கேப்டன் மில்லர் படம் அதிகப்படியான குடும்ப ரசிகர்களை தியேட்டருக்கு கொண்டு வருமா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. அதன் காரணமாக பொங்கலுக்கும் பாக்ஸ் ஆபிஸில் பொங்கல் தான் வைக்கப் போகின்றனர்.