More
Categories: Cinema News latest news

பொங்கலுக்கு வருவது குட் பேட் அக்லியா, விடாமுயற்சியா? முடிவு யாரோட கையில தெரியுமா?

அஜீத் நடித்த படங்கள் வந்து நீண்ட காலமாகி விட்டது. கடைசியாக 2023ல் துணிவு வந்தது. அதன்பிறகு அஜீத் படங்களைப் பார்க்க முடியவில்லையே என ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு வரும் பொங்கல் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரப் போகிறது.

Also read: ஒரே நாளில் மூணு ஹீரோ வாழ்க்கையில் நடந்த அதிரடி திருப்பங்கள்… இத கவனிச்சீங்களா?

Advertising
Advertising

குட்பேட் அக்லி, விடாமுயற்சி என இரு படங்களையுமே பொங்கல் ரிலீஸ்னு அறிவிச்சிட்டாங்க. நேற்று நட்டநடு ராத்திரியில் திடீர்னு விடாமுயற்சி டீசரை ரிலீஸ் பண்ணிட்டாங்க. ரசிகர்கள் முழிச்சிருந்து உட்கார்ந்து கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க.  இப்போ எது முதல்ல வரும் என்பதில் குழப்பம். அதற்கு விடை சொல்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன். வாங்க பார்க்கலாம்.

அஜீத்தின் எண்ணம் முழுக்க குட் பேட் அக்லி படத்துல தான் இருக்கு. அவர் அந்தப் படத்துல தான் ரொம்ப ஈடுபாடு காட்டினார் என்றும் அது பொங்கலுக்கு வந்தால் நல்லாருக்கும் என்றும் ஆசை வந்தது. விடாமுயற்சி படமானது அவர் நினைத்த மாதிரி வேகம் காட்டவில்லை. அதனால் அஜீத் படக்குழு மேல் கோபமா இருந்தார் என்றும் தகவல் வந்தது.

vidamuyarchi teaser

படத்திற்கான சூட்டிங் முடிந்தால் பொங்கலுக்கு ரிலீஸ்னு சொன்னாங்க. அஜீத் சொன்ன லொகேஷன்ல தான் எடுத்தோம்னு லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே மாதிரி கொண்டு வந்துட்டாங்க.

குட் பேட் அக்லி படத்தை ஸ்பீடா முடிச்சிட்டு பொங்கல் ரிலீஸ்னு முதல்லயே அறிவிச்சிட்டாங்க. இப்போ மிக்ஸிங்கிற்காக மட்டுமே 15 நாள் ஒதுக்க வேண்டி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரனோட அப்பா உட்கார்ந்து டப்பிங் வேலைகளைப் பார்த்துக்கிட்டு இருக்காரு.

அதனால அவங்களுக்கு பொங்கலுக்கு விட முடியுமான்னு கொஞ்சம் குழப்பமா இருந்தது. இப்போ 2 நிறுவனங்களுக்குமே ஈகோ வந்துடுச்சு. லைகா நிறுவனம் நாம தான் முதல்ல ஆரம்பிச்சோம்னு சீக்கிரமா விடணும்னு திடீர்னு பொங்கல் ரிலீஸ்னு அறிவிச்சிட்டாங்க. இரு படங்களுக்கும் ஒரு பாடல் பாக்கி இருக்கு.

Also read: சூர்யாவுடன் ஸ்ரேயா சரண்!.. குத்து பாட்டு கன்ஃபார்மா?.. வெளியான சூப்பர் அப்டேட்!..

10 நாள் விடாமுயற்சிக்கு அஜீத் டேட் கொடுக்கணும். எந்தப் படம் வரணும்கறதை அஜீத் தான் முடிவு பண்ணனும். நான் விடாமுயற்சிக்கு டப்பிங் பேச மாட்டேன். குட் பேட் அக்லிக்குத் தான் பேசுவேன்னு நினைச்சா அது முதல்ல வரும். விடாமுயற்சிக்குத் தான் முதல்ல டப்பிங்னாருன்னா அது முதல்ல வரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Published by
sankaran v

Recent Posts