Cinema History
நான் பார்த்ததே இல்லடா!. ஒரு ரூபாய் காயினை பார்த்து அழுத சிவாஜி!.. நடிகர் சொன்ன தகவல்!..
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் எப்படிப்பட்ட ஒரு நடிகராக இருந்தார் என்பதை சொல்ல வேண்டியதில்லை. நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தில் சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி ஒரு நாடக கம்பெனியில் அனாதை என சொல்லி வேலைக்கு சேர்ந்தார். நாடகங்களில் பல வேடங்களிலும் அவர் நடித்தார். பல நாடகங்களில் பெண் வேடத்திலும் சிவாஜி நடித்திருக்கிறார்.
அவர் அறிமுகமான திரைப்படம் பராசக்தி. முதல் படத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு எந்த நடிகருக்கும் அமையாது. கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் வசனங்களில் அனல் பறந்தது. இப்படத்தில் சிவாஜி பேசிய பகுத்தறிவு வசனங்கள் பலரையும் சிந்திக்க வைத்தது. அப்படத்தின் வெற்றி அவருக்கு பல படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது.
இதையும் படிங்க: ஹாலிவுட் லெவல்ல சிவாஜி படம் இருக்கேன்னு பாராட்டிய புரட்சித்தலைவர்… என்ன படம்னு தெரியுமா?
சிவாஜி நடிக்க துவங்கிய போதே அவருக்காக கதை கேட்பது, கால்ஷீட் கொடுப்பது, சம்பளம் பேசுவது, சம்பளத்தை வாங்குவது என எல்லா வேலையும் பார்த்துக்கொண்டவர் அவரின் தம்பி சண்முகம்தான்தான். சிவாஜி எதிலும் தலையிட மாட்டார். இன்று இந்த இயக்குனரின் படம், இந்த இடத்தில் ஷூட்டிங் என்பது மட்டுமே அவருக்கு தெரியும்.
பல வருடங்கள் தனக்கு என்ன சம்பளம் கொடுக்கிறார்கள்? எவ்வளவு கேட்க வேண்டும்? என்பதை கூட தெரியாமல்தான் இருந்தார் சிவாஜி. அதனால்தான் தாவணிக் கனவுகள் படத்தில் சிவாஜி எதிர்பார்த்ததை விட அதிகமாக சில லட்சங்களை பாக்கியராஜ் கொடுத்தபோது நெகிழ்ந்து போய் கண்ணீர் விட்டார் சிவாஜி. அவருக்கு அதிகம் சம்பளம் கொடுத்தது ரஜினி மட்டுமே. படையப்பா படத்தில் நடிக்க ஒரு கோடி கொடுத்தார்.
இதையும் படிங்க: இது எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டிய கதை!.. சிவாஜி சொல்லியும் கேட்காத இயக்குனர்!.. படமோ பிளாப்!..
தமிழ் சினிமாவில் பல படங்களிலும் வில்லனின் அடியாளாக நடித்த பொன்னம்பலம் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘சத்தியராஜ் நடித்த புதிய வானம் படத்தின் படப்பிடிப்பில் நான் இருந்தபோது கையிலிருந்த ஒரு ரூபாய் காயின் கீழே விழுந்தது. அதை குனிந்து எடுத்தேன். அப்போது அருகில் இருந்த சிவாஜி என்னை அழைத்து அந்த காயினை வாங்கி பார்த்து அழுதார். ‘ஏன் சார் அழுறீங்க?’ என கேட்டேன்.
‘இதெல்லாம் நான் பார்த்ததே இல்லடா’ என சொன்னார். ‘என்ன சார் சொல்றீங்க?. நம்புறமாதிரியா இருக்கு’ என்றேன். ‘இல்லடா!.. நான் கை நீட்டி சம்பளம் வாங்குறது இல்ல. அந்த காசை நான் பாக்குறதும் இல்ல. ஜூஸ், சாப்பாடு, பிரியாணி என என்ன கேட்டாலும் எனக்கு வந்துவிடும். தேவையானது எல்லாமே கிடைக்கும். அதனால், காசை பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டது’ என சொன்னார். அதோடு, ‘உன்னிடம் வேறு காசு இருந்தால் எடுத்து வா’ என்றார்.
25 காசு, 50 காசு, ஒரு ரூபாய் நோட்டு, 5 ரூபாய் நோட்டு என எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அவ்வளவு சந்தோஷப்பட்டார். ’இதெல்லாம் நானே வச்சுக்கட்டுமா?’ என கேட்டார். ‘வச்சிக்கோங்க சார். என்கிட்ட போய் நீங்க கேட்கணுமா?’ என்றேன். அணிந்திருந்த கோட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டார்’ என பொன்னம்பலம் கூறினார்.