More
Categories: Cinema History Cinema News latest news

என் தங்கை திருமணத்திற்கு பணம் இல்லை!. விஜயகாந்த் என்ன செய்தார் தெரியுமா?!.. உருகிய பொன்னம்பலம்…

தமிழ் சினிமாவில் பல சிறிய நடிகர்களை அறிமுகம் செய்து அவர்களை பெரிய அளவில் உயர்த்திய நடிகரென்றால் அது கேப்டன் விஜயகாந்துதான். பொன்னம்பலம், மன்சூர் அலிகான், சரத்குமார், அருண் பாண்டியன் என பெரிய லிஸ்ட்டே இருக்கிறது.

கேப்டன் பிரபாகரன் படம் வருவதற்கு முன் மன்சூர் அலிகானை யாரென்றே யாருக்கும் தெரியது. அவர் ஒரு நடன நடிகர். குரூப்பில் நடனம் ஆடுவார். அதன்பின் சண்டை நடிகராக மாறினார். அவரை கேப்டன் பிரபாகரன் படத்தில் கொடூர வில்லனாக மாற்றினார் விஜயகாந்த். அதனால்தான் இப்போதுவரை விஜயகாந்துக்கு விசுவாசமாக இருக்கிறார் மன்சூர் அலிகான்.

Advertising
Advertising

அதேபோல், பொன்னம்பலத்தின் வாழ்வில் ஒளியேற்றியவரும் விஜயகாந்துதான். தமிழ் சினிமாவில் சண்டை நடிகராக நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் பொன்னம்பலம். அதுவும் விஜயகாந்த் படமெனில் இவர் கண்டிப்பாக இருப்பார்.

ஒரு குழுவாக விஜயகாந்தோடு சண்டை போடும் நடிகராக இருந்த பொன்னம்பலம், அதன்பின் தனியாக விஜயகாந்தோடு சண்டை போடும் நடிகராக மாறினார். அவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்ததும் விஜயகாந்துதான். அதன் பின்னரே பல திரைப்படங்களில் ஹீரோக்களோடு தனியாக மோதும் சண்டை நடிகராகவும், வில்லனாகவும் பொன்னம்பலம் மாறினார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜயகாந்த் பற்றி பேசிய பொன்னம்பலம் ‘என் தங்கைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு தேதி அருகில் வந்துவிட்டது. ஆனால், என்னிடம் பணமே இல்லை. திருமணத்திற்கு வெறும் 3 நாட்களே இருந்தது. அப்போது விஜயகாந்த் படத்தில் ஒரு சண்டை காட்சி எடுக்க வேண்டியிருந்தது. ஆனால், இன்னும் 3 மாதம் கழித்தே அந்த சண்டையை எடுக்க இயக்குனர் திட்டமிட்டிருந்தார். அப்போது என்னை அழைத்த விஜயகாந்த் ‘எப்போது திருமணம்…எப்படி சமாளிக்கபோகிறாய்?’ எனக்கேட்டார்.

அதன்பின் 3 மாதம் கழித்து எடுக்க வேண்டிய சண்டை காட்சியை நாளைக்கே எடுப்போம் என்றார். பகல் முழுவதும் வேறு படத்தில் நடித்துவிட்டு இரவு முழுவதும் என்னுடன் சண்டை போடுவார். இப்படி 2 நாட்கள் நடித்தார். என் தங்கையின் திருமண நாள் அடுத்த நாள், ஆனால், நான் முதல் நாள் இரவு வரை அந்த சண்டை காட்சியில் நடித்துக்கொண்டிருந்தேன். அடுத்த நாள் காலை எனக்கு முன் திருமண மண்டபத்திற்கு கையில் பணத்துடன் வந்துவிட்டார். அவர்தான் கேப்டன்’ என உருகினார் பொன்னம்பலம்.

இதையும் படிங்க: காலம் தாண்டியும் பேசப்பட்ட கிளாசிக் திரைப்படத்திற்கு வந்த சோதனை… இவ்வளவு வருஷமாவா இழுத்தடிக்கிறது??

Published by
சிவா

Recent Posts