வெடித்தது சர்ச்சை.! போஸ்டரிலேயே பூகம்பமா.?! 500 கோடிடா கொஞ்சம் சும்மா இருங்கடா.!

by Manikandan |
வெடித்தது சர்ச்சை.! போஸ்டரிலேயே பூகம்பமா.?! 500 கோடிடா கொஞ்சம் சும்மா இருங்கடா.!
X

தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் இயக்குனர் மணிரத்னம். ராமாயணம், மஹாபாரதத்தை கூட தற்காலத்து கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டு ராவணன் , தளபதி ஆகிய படங்கள் மூலம் எடுத்து காட்டியவர் மணிரத்னம். அவர் தன்னுடைய கனவு திரைப்படமாக எண்ணி தற்போது இயக்கி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இந்த திரைப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை மணிரத்னம் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தும் வருகிறார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ், த்ரிஷா , பிரபு, சரத்குமார் என பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் பட போஸ்டர்கள் நேற்று லைகா நிறுவனர் கருணாகரன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோரின் போஸ்டர்கள் வெளியானது. வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இதையும் படியுங்களேன் - நம்பவைத்து காலை வாரிய சூர்யா.!? கடைசில இவரையும் தெலுங்கு பக்கம் விரட்டிட்டாங்களே.!

இப்பட போஸ்டர்கள் போட்டோஷாப் செய்து இணைத்தது போல இருக்கிறது என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அது கூட பரவாயில்லை. எதோ போட்டோ நன்றாக இல்லை என்று கூறுகிறார்கள் என்று விட்டுவிடலாம். ஆனால், திரிஷா கதாபாத்திர போஸ்டரில் திரிஷா மட்டும் வெள்ளையாக இருப்பார்.

அவரை சுற்றியுள்ள மற்ற பணிப்பெண்கள் கருப்பாக இருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இதனை குறிப்பிட்டு தமிழ்நாட்டு பெண்கள் என்றால் கறுப்பாகத்தான் இருப்பாரா? மணிரத்னம் தனது வேலையை காட்டுகிறார் என்று ஒரு குரூப் இணையத்தில் புயலை கிளப்பி வருகிறது.

எது எப்படியோ, போஸ்டரில் சந்தித்த கேலி கிண்டல்களை சமாளித்து அடுத்தடுத்த அப்டேட்களில் ரசிகர்களை கவர படக்குழு முயற்சி செய்தால் போதும்.

Next Story