More
Categories: Cinema News latest news

சல்மான் கானிடம் சரக்கு இல்லை!.. கிரிக்கெட் வீரரை சட்டென கரெக்ட் செய்த பூஜா ஹெக்டே?..

தொடர் தோல்வி காரணமாக சினிமாவை விட்டு விட்டு திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆகி விடலாம் என்றே நினைத்து விட்டார் பூஜா ஹெக்டே என பாலிவுட்டில் பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்த படம் அவருக்கு தோல்வி படமாக அமைந்த நிலையில் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

Advertising
Advertising

ரித்திக் ரோஷனுடன் பாலிவுட்டில் பூஜா ஹெக்டே நடித்த மொகஞ்சதாரோ திரைப்படம் படுதோல்வி படமாக மாறியது. அதன் பின்னர் தெலுங்கில் அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த பூஜாவுக்கு சில தரமான வெற்றி படங்கள் கிடைத்தன.

இதையும் படிங்க: சொகுசு கார்.. சொந்தமா பண்ணைத் தோட்டம்!.. என்னம்மா வாழுறாருப்பா ஜிபி முத்து!.. புது வீடியோ பார்த்தீங்களா?..

மகேஷ் பாபுவின் மகரிஷி, அல்லு அர்ஜுன் நடித்த வைகுண்டபுரம் உள்ளிட்ட படங்கள் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், விஜய், பிரபாஸ், ராம்சரண், சல்மான்கான் என பூஜா ஹெக்டேவின் ரேஞ்சே மாறியது.

ஆனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதுபோல பெரிய நடிகர்களுடன் கிடைத்த வாய்ப்புகள் வரிசையாக தோல்வி படங்களாக அமைந்த நிலையில் பூஜா ஹெக்டே மீண்டும் ராசி இல்லாத நடிகர் என்று முன்னணி ஹீரோக்கள் ஒதுக்க ஆரம்பித்து விட்டனர்.

விஜயுடன் தமிழில் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டேவுக்கு அரபி குத்து பாடல் மட்டுமே சிறப்பாக அமைந்திருந்தது. பிரபாஸ் உடன் நடித்த ராதே ஷியாம், ராம்சரண் உடன் நடித்த ஆச்சார்யா மற்றும் சல்மான்கானுடன் ஹிந்தியில் நடித்த வீரம் ஹிந்தி ரீமேக் என வரிசையாக படங்கள் தோல்வியை தழுவின.

இதையும் படிங்க: கிணத்த காணோம்கிற மாதிரி சொல்றாரே!. சந்திரமுகி 2 ரிலீஸ் தள்ளிபோனதற்கு காரணம் இதுதானாம்!..

சல்மான் கான் உடன் பூஜா ஹெக்டே பாலிவுட்டில் நடித்து வந்த நிலையில், இருவரும் காதலித்து வருவதாக படத்தின் புரமோஷனுக்காக வழக்கம் போல் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அந்த படம் தோல்வி அடைந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் பரபரப்பை கிளப்பின.

இந்நிலையில், சமீபகாலமாக மும்பையைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரருடன் நெருக்கமான தொடர்பில் பூஜா ஹெக்டே இருப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: ‘வணங்கான்’ திரைப்படத்தின் கதை இதுதான்! போஸ்டரின் மூலம் மிரட்டிய பாலா – வைரமாவாரா அருண்விஜய்?

ஆனால், இது தொடர்பாக பூஜா ஹெக்டே தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அரசியல் தலைவரை பிரியங்கா சோப்ரா தங்கை பரினீத்தி சோப்ரா காதலித்ததாக சமீபத்தில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இருவரும் நேற்று திருமணம் செய்து கொண்டனர். அதைப்போலவே பூஜா ஹெக்டே கிரிக்கெட் வீரருடன் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா என்கிற கேள்வி வைரலாகி வருகிறது.

Published by
Saranya M

Recent Posts