நடிகை பூனம் பாண்டே திடீர் மரணம்!. இன்ஸ்டாகிராமில் வெளியான அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..

Published on: February 2, 2024
poonam
---Advertisement---

Poonam pandy: பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் பூனம் பாண்டே. சில படங்களில் நடித்திருக்கிறார். சில படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு காஜி ரசிகர்களுக்கு விருந்து வைப்பார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு.

அதோடு, தனக்கென ஒரு தனி ஆப் மற்றும் வெப்சைட் உருவாக்கி அதில் ஆபாச வீடியோக்களையும் பகிர்ந்து வந்தார். சில சமயம் ஏடாகூடமான வீடியோக்களை இன்ஸ்டாகிராமிலேயே பதியவிட்டு விடுவார். சில வருடங்களுக்கு முன்பு அப்படித்தான் தனது காதலருடன் படுக்கையில் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சில நிமிடங்களில் அதை நீக்கினார்.

poonam
poonam

ஆபாச வீடியோக்கள் தொடர்பாக இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவங்களும் நடந்திருக்கிறது. இந்நிலையில், இன்று காலை அவர் மரணமடைந்துவிட்டதாக அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2013ம் வருடம் வெளியான நாஷா என்கிற படத்தில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானார்.

மேலும், இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையில் வெற்றி பெற்றால் நிர்வாணமாக ஓடுவேன் என சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர். இவருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருந்ததாக சொல்லப்பட்டது. அதற்கான சிகி்ச்சைகளையும் அவர் எடுத்து வந்தார். இந்நி்லையில்தான் இன்று அதிகாலை இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

poonam

இந்த செய்தி பாலிவுட் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்பற்றி வந்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சிலரோ இதில் உண்மை இல்லை. ஃபிராங்க் எனவும் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், ஹிந்தி டிவியிலும் இந்த செய்தி ஒளிபரப்பாகி வருகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.