Connect with us

Biggboss Tamil 7

பூர்ணிமா உங்களுக்கு ரொம்ப தைரியம் தான்ல!… வெளில வந்து புரோமோஷன் பண்ணி என்ன புண்ணியம்!..

PoornimaRavi: பிக்பாஸ் தமிழ் சீசன் 7 முடிவை நெருங்கிவிட்ட நிலையில், சமீபத்தில் பணப்பெட்டியுடன் வெளியேறி இருக்கும் பூர்ணிமா செய்யும் சேட்டைகள் தான் நெட்டிசன்களின் கடுப்பை வெகுவாக கிளறிவிட்டு இருக்கிறது. அதிலும் அவர் செய்யும் சில சேட்டைகளுக்கு அளவில்லாமல் போய்விட்டது.

இந்த சீசன் தொடங்கியதே இரண்டு வீடு என்ற எதிர்பார்ப்புடன் தான். ஆனால் அது முதல் நாளே புஸ்ஸானது. சரி ஒரு வீடு எல்லா வேலையும் பார்த்தால் அப்போ டாஸ்கெல்லாம் வலுவாக இருக்கும் போல என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். ஆனால் 100 நாட்கள் கடந்தும் உருப்படியாக எதுவுமே இல்லை.

இதையும் படிங்க: என்னப் பத்தி சொன்னா உங்களை பத்தி எல்லாத்தையும் சொல்லிருவேன்! ரஜினியை மிரட்டிய வில்லன் நடிகர்

கிட்டத்தட்ட வாயை மட்டுமே போட்டியாளர்கள் கண்டெண்ட்டுக்கு பயன்படுத்த வேண்டிய நிலை உருவானது. அதிலும் நாங்க சளைச்சவர்கள் இல்லை என ஒரு கூட்டம் இறங்கியது. கிட்டத்தட்ட முதல்முறையாக அதிகம் விமர்சிக்கப்பட்ட பெண் போட்டியாளர் என்ற பெருமையை பெற்றனர் மாயா, பூர்ணிமா. இவர்களுடன் ஐஷு, நிக்‌ஷன், ஜோவிகா, சரவண விக்ரம், அக்‌ஷயா என பலரும் புல்லி கேங் என பல பிரபலங்களே அழைத்தனர் என்பது தான் கூடுதல் காமெடி.

இவர்களை வெளியேற்ற ரசிகர்கள் கஷ்டப்பட்டு ஓட்டு போட்டாலும் கூட நிக்ஸன் மற்றும் ஐஷுவை மட்டுமே வெளியேற்ற முடிந்தது. மாயாவை கமலே பைனலிஸ்ட்டாக்கி இருக்கிறார். பூர்ணிமா கில்லியாக 16 லட்ச பெட்டியை எடுத்துக்கொண்டு டாட்டா காட்டி விட்டார். சரி போன சும்மா இருக்க வேண்டித்தானே.

இதையும் படிங்க: என் அப்பா, அண்ணன் இறந்தப்போ கூட எனக்கு இப்படி ஆகல!.. விஜயகாந்துக்காக உருகும் எஸ்.ஏ.சி.

கமல் எபிசோட்டில் வந்து மக்கள் கொண்டாடுறாங்கனு உருட்டினார். தொடர்ந்து வீட்டில் அவர் வெளியேற்றத்தை கொண்டாடிய வீடியோ, அம்மணி கோவில் போன வீடியோ, விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய வீடியோ என தொடர்ந்து வைரலில் சுற்றிக்கொண்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களும் அவரை வரிசையாக வசைப்பாடி கொண்டே தான் உள்ளனர்.

இருந்தும் அதையெல்லாம் தூக்கி தூரவிட்டுவிட்டு தான் செய்வதை செஞ்சிக்கொண்டு தான் இருக்கிறார். இந்த கேங்கில் ஐஷு மட்டுமே தான் செஞ்சதுக்கு மன்னிப்பு கேட்ட நிலையில் மற்ற அனைவரும் நெகட்டிவிட்டியை கண்டிக்காமல் நாங்க கெத்துதான் என சுற்றி வருவதால் ரசிகர்களும் இதுங்கள திருத்த முடியாது என கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கேப்டன் மில்லர் படத்தை பார்த்து விஜய் என்ன சொன்னார் தெரியுமா? அட ஓபனாவா சொல்றது!..

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top