விஜயிற்கு கதை சொல்ல போய் பல்ப் வாங்கி வந்த முன்னணி நடிகர்… என்னங்க இப்படி ஆகிப்போச்சு!
Vijay: விஜயின் அடுத்த இயக்குனர் யார் என்ற சர்ச்சை இன்னுமும் கோலிவுட்டை விட்ட பாடில்லை. தொடர்ச்சியாக பல முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இருக்கும் நிலையில் தற்போது ஒரு சுவாரசிய தகவல்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தை முடித்த கையோடு தளபதி 69 படத்தில் விஜய் இணைய இருக்கிறார். ஆனால் அப்படத்தை யார் இயக்குவார் என்ற சந்தேகமே பலரிடம் தொடர்ந்து நிலவு வருகிறது. முதலில் கார்த்திக் சுப்புராஜ் தொடங்கி சமீபத்திய எண்ட்ரியாக ஹெச் வினோத் வரை பலரின் பெயர்கள் அலசப்பட்டது.
இதையும் படிங்க: கவுண்டமணியையே அழ வைத்த இயக்குனர்… டகால்டிக்கே டகால்டியா?.. அப்படி என்னதான் நடந்தது?..
இப்படத்தை முடித்துவிட்டு விஜய் முழு நேர அரசியல் பணிகளில் ஈடுபட இருப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. முக்கியமாக தளபதி 69 அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்பதால் அந்த கதையை சரியாக கையாளும் இயக்குனரை விஜய் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த தேடலில் தற்போதைய தகவலின் படி ஹெச்.வினோத்தே வெற்றி வாகை சூட இருக்கிறார். அவரின் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் தளபதி 69 விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் ஏற்கனவே கோலிவுட் வட்டாரத்திலிருந்து பேச்சுகள் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: திடீரென ஏற்பட்ட கார் விபத்து… மனைவியுடன் விவாகரத்து!.. போராடி மீண்டு வந்த ராமராஜன்!…
இந்நிலையில் குட் நைட் படத்தின் மூலம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் நடிகர் மணிகண்டன். அப்படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான லவ்வர் திரைப்படமும் நல்ல ரீச்சை கொடுத்தது. நடிப்பு ஒரு பக்கம் பரபரப்பாக சென்று கொண்டு இருக்க மணிகண்டனுக்கு இயக்கும் ஆசை வந்திருக்கிறதாம்.
அதனால் நடிகர் விஜய் சந்தித்து அரசியல் சார்ந்த ஒரு கதையை சில மணி நேரங்கள் சொல்லியதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால் இந்த கதையை முழுவதுமாக கேட்ட விஜய் நல்லா இருக்கு. ஆனா, அரசியலில் நுழைய இருக்கிறேன். இதில் இளம் நாயகர்கள் மட்டுமே நடித்தால் நன்றாக இருக்கும் என கூறி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.