Power Star: நம்பிக்கை துரோகம்.. ஏமாற்றம்! பவர் ஸ்டாரின் பரிதாப நிலை.. என்னதான் ஆச்சு?

powerstar
Power Star: தமிழ் சினிமாவில் மாஸ் படங்களை கொடுத்துதான் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற வேண்டும் என்பதுல்லை. ஏதாவது ஒரு வகையில் மக்களை எண்டெர்டெயின்மெண்ட் செய்தாலே போதும். காலங்கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்க முடியும். அப்படி மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர்தான் பவர் ஸ்டார் சீனிவாசன். இவருக்கு தற்போது உடல் நிலை சரியில்லாமல் கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்கு சிறு நீரக கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும் அது அடுத்த கட்ட லெவலுக்கு போகாமல் இருப்பதற்காகவும் மருத்துவர்கள் தேவையான சிகிச்சையை கொடுத்து கொண்டு வருகின்றனர். சமீபகாலமாக மயக்கம், உடல் சோர்வு இவற்றால் பாதிக்கப்பட்டு வந்த பவர் ஸ்டார் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்தாராம். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறு நீரக கோளாறு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பாக்கியராஜோட அந்த மெகா ஹிட் படத்துக்கு இன்ஸ்பிரேஷன் யாருன்னு தெரியுமா? அடடே அவரா?
ஸ்கேன், ஈசிஜி மற்றும் கிட்னி டெஸ்ட் எடுத்திருப்பதாகவும் பவர் ஸ்டார் தெரிவித்தார். மேலும் ஏன் தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் அரசு மருத்துவமனைக்கு வந்தேன் என்பதை பற்றியும் கூறினார் பவர் ஸ்டார். அதாவது மருத்துவமனையில் தனியார் , அரசு என்று பார்க்காம எங்கு சிகிச்சை நன்றாக இருக்கிறதோ அங்கு பார்த்தால் போதும்.
அதுவும் ஸ்டாலின் ஆட்சியில் இந்த மருத்துவமனை மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது . சிகிச்சையும் நன்றாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். மேலும் இடையில் பணக்கஷ்டம், நம்பிக்கை துரோகம், ஏமாற்றம் இவற்றால் என் வாழ்க்கையே போனது. இதனால் என் உடம்பை கவனிக்காமல் விட்டுவிட்டேன். அதனால் வந்த விளைவுதான் இப்போது மருத்துவமனையில் உட்கார்ந்திருக்கிறேன் என்று பவர் ஸ்டார் கூறினார்.
இதையும் படிங்க: திரிஷா என் தோழிலாம் இல்லை… பேட்டியில் அடாவடியாக பேசிய நயன்தாரா… வைரலாகும் வீடியோ!
ஒரு காலத்தில் அவருடைய படங்கள் ரிலீஸ் என்றால் அவருக்கான ரசிகர் கூட்டம் ஆரவாரத்துடன் இருப்பார்கள். அவரிடம் நலம் விசாரித்தாலே கையில் பணத்தை வீசுவார் பவர் ஸ்டார். ஆனால் அவருக்கு இப்படி ஒரு நிலைமை எனும் போது பரிதாபமாகத்தான் இருக்கிறது.