Prabhas: இன்னுமா பிரபாஸ நம்புறீங்க… ஒரே நேரத்தில் மூன்று கொடுத்த பிரபல நிறுவனம்…

prabhas
Prabhas: நடிகர் பிரபாஸின் நேரம் சரியில்லை என்றாலும் வாய்ப்புக்கு எந்த பிரச்னையுமே இல்லை. அதை மீண்டும் நிரூபித்து இருப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது பிரபல நிறுவனம்.
இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் முக்கிய நடிகராக இருப்பவர் பிரபாஸ். ஈஸ்வர் படத்தில் அறிமுகமான பிரபாஸுக்கு தொடர்ந்து வாய்ப்புகளும் குவிந்தது. ஆனால் அவருக்கு திரிஷாவுடன் நடித்த வர்சம் திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது.
இதையும் படிங்க: Vijayasanthi: அடி வாங்கி தான் சூப்பர் ஸ்டார் ஆனேன்.. நீண்ட நாளுக்கு பிறகு விஜயசாந்தி கொடுத்த பேட்டி
அதை தொடர்ந்து திரைப்படங்களில் அவர் நடித்து வந்தாலும் பெரிய அளவில் வசூல் படங்களில் நடிக்கவில்லை. இருந்தும் தெலுங்கில் வெற்றிநாயகராகவே வலம் வந்தார். 12 ஆண்டுகள் கழித்து ராஜமெளலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்தார்.
அது பிரபாஸின் திரை வாழ்க்கையே மாற்றியது. பேன் இந்தியா என்ற வார்த்தைக்கு அடையாளமாகியது. இப்படம் இரண்டு பாகங்களாக வெளிவந்து பிரபாஸின் மார்க்கெட்டையே உயர்த்தியது. ஆனாலும் அப்படத்தினை தொடர்ந்து பிரபாஸுக்கு தெலுங்கில் கூட மிகப்பெரிய வெற்றி கிடைக்கவில்லை.
கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்திருந்தார். அப்படமும் வசூல் குவித்தாலும் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்நிலையில் பிரபாஸுடன் மீண்டும் இணைவதாக ஹோம்பாலி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: PradeepAntony: ஓவர் குசும்பு தான்!… திருமணம் முடிந்த கையோட பிரதீப் ஆண்டனி செஞ்ச வேலை… செம வைரல்!…
இப்படத்தின் பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறதாம். லோகேஷ் கனகராஜ் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பதால், தமிழ் ரசிகர்களும் இந்த அறிவிப்பு குறித்து ஆர்வமாக இருந்து வருகின்றனர். இருந்தும் சமீப காலமாக பிரபாஸிடம் பெரிய அளவில் வெற்றி படங்கள் இல்லாமல் இருப்பது ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவே கூறப்படுகிறது.