கட்டப்பா குத்துனாலும் குத்துனாரு! எழுந்திருக்கவே முடியல - பிரபாஸை பார்த்து பயந்தோடும் திரையுலகம்

by Rohini |   ( Updated:2023-09-04 07:48:43  )
prabhas
X

prabhas

தெலுங்கில் பிரபல முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். ஏகப்பட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் அந்தஸ்தை பெற்ற நடிகராக திகழ்ந்து வருகிறார். இவரின் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் எப்பேற்பட்ட வெற்றியை பதிவு செய்தது என உலகமே பார்த்து வியந்த செய்தி.

இரண்டு பாகங்களாக வெளிவந்த பாகுபலி திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் சாதனையை பெற்றது. அதுமட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் அபிமானத்தையும் பிரபாஸ் பெற்றார் என்றே சொல்லவேண்டும். அந்தளவுக்கு பாகுபலி படத்தில் தன்னுடைய வீரமிக்க நடிப்பையும் வசனத்தையும் அள்ளி வீசினார்.

இதையும் படிங்க : எவனோ போட்டிக்கு வந்துட்டான்… பாரதிராஜா படம் பார்த்து ஷாக்கான பாலசந்தர்… என்ன படமோ!

அதன் மூலம் பிரபாஸ் மீது ஒட்டுமொத்த திரையுலகத்தின் பார்வையும் பட்டது. நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு பட வாய்ப்புகளை வாரி வழங்கினர். ஆனால் அங்குதான் பிரபாஸின் நிலைமையே வேறு மாதிரியாக மாறியது.

பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபாஸின் நடிப்பில் வெளிவந்த ராதே ஸ்யாம், சாஹோ, ஆதி புருஷ் போன்ற படங்கள் மோசமான தோல்விகளை தழுவியது. அதுவும் இந்தப் படங்கள் எல்லாம் பெரிய பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களாகவே அமைந்தன.

இதையும் படிங்க : அண்ணன் புகழை பாடிய அட்லீக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சன் டிவி வைத்த ஆப்பு!..

இந்த நிலையில் கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் படம் சலார். இதுவும் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வரும் திரைப்படமாகும். இந்தப் படம் வருகிற 28 ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் சில தினங்களுக்கு முன் ட்விட்டரில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்ததாக ஒரு தகவல் வெளியானது.

விசாரித்ததில் சலார் படத்தின் ஆடியோ, டிஜிட்டல் சாட்டிலைட் உரிமம் இன்னும் விற்கப்படாமலேயே இருக்கின்றதாம். காரணம் இதற்கு முந்தைய பிரபாஸின் திரைப்படங்கள் தழுவிய மோசமான தோல்வியினாலேயே சலார் படத்தின் உரிமங்களை வாங்குவதற்கு முன்வர தயங்குகிறார்களாம். அதன் காரணமாகத்தான் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருக்கிறார்களாம்.

இதையும் படிங்க : அனிருத் மட்டும் என்ன தக்காளி தொக்கா?!. ராக் ஸ்டாரை டீலில் விட்ட கலாநிதி மாறன்…

Next Story