Connect with us
pra

Biggboss Tamil 7

ரெட் கார்டா கொடுக்கிறீங்க? அதுவே எனக்கு ஒரு அவார்டுதான் – பிரதீப் செஞ்ச காரியத்தை பாருங்க

Pradeep Antony: பிக்பாஸ் வீட்டிலிருந்து திடீரென ரெட் கார்டு கொடுத்து  பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சீசனின் டைட்டில் வின்னர் பிரதீப்தான் என்று பெரும்பாலான ரசிகர்கள் எண்ணிக் கொண்டிருந்தனர்.

ஆனால் சமீபகாலமாக பிரதீப்பின் செயல் கொஞ்சம் உச்சக்கட்டமாக சென்றமையால் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் பிரதீப்பிற்கு எதிராக செங்கொடி தூக்கி தங்கள் எதிர்ப்பை காட்ட ஆரம்பித்தனர். விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் பிரதீப்பைத்தான் டைட்டில் வின்னராக மக்கள் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இதையும் படிங்க: ராதிகாவை தொடர்ந்து பாக்கியா வீட்டில் மாலினி..! அப்பாவுக்கு பையன் தப்பாம இருக்கீங்க செழியன்..!

ஆனால் பிரதீப் இருந்தால் உள்ளே இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பிம்பத்தை சக போட்டியாளர்களே உருவாக்கினார்கள். இதனால் இதுக்கு மேலேயும் பிரதீப் உள்ளே இருந்தால் அது தங்களுக்கு பாதுகாப்பாக இருக்காது என பெண் போட்டியாளர்கள் திரும்ப திரும்ப அந்த கருத்தை முன்வைக்க, ரெட் கார்டு கொடுத்து வெளியனுப்பி விட்டனர்.

pradeep

pradeep

இந்த செய்தி பிரதீப் சார்ந்த நண்பர்களுக்கும் பிக்பாஸ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் பிரபலங்களான கவின், சினேகன் உட்பட ஒரு சில பேரும் பிரதீப்பிற்கு ஆதரவும் சொல்லி வந்தார்கள்.

இதையும் படிங்க: பராசக்தி படத்திற்கு சிவாஜி சம்பவளம் இவ்வளவுதானா?!. என்னடா நடிகர் திலகத்துக்கு வந்த சோதனை!…

இப்படி ஒரு ரெட் கார்டை கொடுத்து பிரதீப்பின் எதிர்காலத்தை சிதைத்ததோடு மட்டுமில்லாமல் கமலும் கெட்டப் பெயரை சம்பாதித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ரெட் கார்டை வாங்கிய கையோ மனுஷன் சோகத்தில் இருப்பார் என்று பார்த்தால் அந்த ரெட்கார்டை வைத்து தன் குடும்ப உறுப்பினர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு கொண்டாடி வருகிறார் பிரதீப்.

pradeep

pradeep

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top