அட்லீ, லோகேஷை மறைமுகமாக தாக்கிய பிரதீப்! - என்னடா இயக்குநர்களுக்கு வந்த சோதனை..

by Saranya M |   ( Updated:2023-11-19 10:30:45  )
அட்லீ, லோகேஷை மறைமுகமாக தாக்கிய பிரதீப்! - என்னடா இயக்குநர்களுக்கு வந்த சோதனை..
X

பிரதீப் ஆண்டனிக்கு நீதி வேண்டும், நியாயம் வேண்டும் என சோஷியல் மீடியாவில் அவரது ஆர்மியினர் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மனுஷன் ஜாலியா கோவா டூர் பிளான் போட்டு விட்டார் என்பதை ட்வீட் போட்டு தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனி ஆரம்பத்தில் இருந்தே ஓவர் வாயாக இரிடேட் செய்யும் விதமாக சிரிப்பதும், பேசுவதுமாக இருந்தார்.

இதையும் படிங்க: ராதா மகள்!.. கோ பட ஹீரோயின் கார்த்திகா நாயர் திருமணம்.. 80ஸ் பிரபலங்கள் மொத்தமும் ஆஜர்!..

போட்டியாளர்களை வம்பிழுப்பதும் பெண் போட்டியாளர்களிடம் என்னையும் லவ் பண்ணு, காதல் கன்டென்ட் நாம செய்யலாம் என மன்சூர் அலி கானை விட மோசமாக விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் பேசிக் கொண்டு எல்லை மீறி நடந்து வந்தார்.

ஆரம்பத்தில் பலருக்கும் பிரதீப் ஆண்டனியை பிடிக்காமல் இருந்த நிலையில், திடீரென அவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து பலரும் அவர் பக்கம் தாவி விட்டனர். பிக் பாஸ் பெண் போட்டியாளர்கள் பிரதீப்பை எப்படியாவது வெளியே அனுப்பி விட வேண்டுமென நினைத்து அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுக்க ஆரம்பித்தனர். அதன் ஒரு பகுதியாக உமன் கார்டை பெண் போட்டியாளர்கள் பலர் பயன்படுத்திய நிலையில், பெண்களுக்கு எதிரானவர் என முத்திரைக் குத்தப்பட்டு பிரதீப் வெளியேற்றப்பட்டார்.

இதையும் படிங்க: அமிதாப்பச்சானிடம் பல்பு வாங்கிய சீயான்… அதுக்கு அப்புறம் நடந்ததுதான் செம போங்க!…

இந்நிலையில், கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவுக்கு சென்று ஹாலிவுட் படங்களை பார்த்து 4 படங்களில் இருந்து கதைகளை திருடி ஒரு பக்காவான ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணப் போகிறேன் என ட்வீட் போட்டுள்ளார்.

இயக்குநர் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் எல்லாம் சமீப காலமாக அப்படித்தான் படங்களை இயக்கி வருகின்றனர் என்பதை மறைமுகமாக தாக்கி உள்ளார் பிரதீப் ஆண்டனி என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Next Story