Pradeep Renganathan: இயக்குனர்கள் நடிகராவது என்பது சமீபகாலமாக இருக்கும் நடைமுறையாகவே மாறிவிட்டது. ஒரு படத்தை எடுத்து ஹிட் கொடுத்து பிரபலமான பிறகு அடுத்த படத்தில் அந்த இயக்குனரே ஹீரோவாவது என்பது சினிமாவிற்கு ஒன்றும் புதிதல்ல.
அந்த வகையில் பிரதீப் ரெங்கநாதன் மட்டும் விதிவிலக்க என்ன? கோமாளி என்ற அனைத்து தரப்பினரும் விரும்பத்தக்க படத்தை எடுத்து ஓஹோ என பேசப்பட்டவர்தான் பிரதீப் ரெங்கநாதன். அந்தப் படத்திற்கு பிறகு தன்னுடைய இரண்டாவது படத்தில் அவரே ஹீரோவாக நடித்தார்.
இதையும் படிங்க: அட என்னங்க இப்படி..! பாய்ஸ் மணிகண்டன் இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?
குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் பெற்ற படமாக அமைந்தது ‘லவ் டுடே’. யாருமே எதிர்பாராத ஒரு வெற்றியை இந்த தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார் பிரதீப் ரெங்கநாதன். அதுவும் இந்த காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் அந்தப் படம் அமைந்ததால் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்தப் படத்தில் நான் தான் ஹீரோ. நான் தான் இயக்குனர் என சொல்ல பல தயாரிப்பு நிறுவனங்கள் அந்தப் படத்தை தயாரிக்க தயங்கியது. ஆனால் பிரதீப் மீது கொண்ட நம்பிக்கையால் ஏஜிஎஸ் நிறுவனம் தான் படத்தை தயாரிக்க முன்வந்தது. அந்த நம்பிக்கையும் வீண்போக வில்லை.
இதையும் படிங்க: கமல் முன்னாடியே அல்லு பண்ணவரு! வெளியே வந்து சும்மா இருப்பாரா? இவன்தாயா டைட்டில் வின்னர் – கூல் சுரேஷ் பேட்டி
தற்போது பிரதீப் ரெங்க நாதனை வைத்து விக்னேஷ் சிவன் எல்.ஐ.சி என்ற படத்தை இயக்க இருக்கிறார். அதற்கு அடுத்த படியாக இன்னொரு படத்திலும் பிரதீப் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். அந்தப் படத்தையும் ஏஜிஎஸ் தான் தயாரிக்க இருக்கிறதாம். ஒ மை கடவுளே படத்தை இயக்கிய இயக்குனர் மாரிமுத்துதான் இந்தப் படத்தையும் இயக்குகிறாராம்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தப் புதிய படத்திற்காக ஏஜிஎஸ் நிறுவனத்திடம் தன் சம்பளமாக 10 கோடி கேட்கிறாராம் பிரதீப். அதனால் தயாரிப்பு தரப்பில் கொஞ்சம் அதிர்ப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: இப்படியெல்லாம் நின்னா தூக்கம் போயிடும்!.. ஜில்லாக்கி ஜிவ்வுன்னு இழுக்கும் யாஷிகா ஆனந்த்..
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…