ஜோடி, ஜீன்ஸ் படத்தை பிரசாந்த் தட்டிபறித்தாரா? நடிக்க வேண்டியது இந்த ஹீரோக்கள் தானாம்..
Prasanth: நடிகர் பிரசாந்தின் மிக முக்கிய வெற்றி படங்களாக அமைந்த ஜீன்ஸ் மற்றும் ஜோடி திரைப்படம் அவருக்காக உருவாக்கப்பட்டது இல்லை. தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்களுக்காக உருவாக்கப்பட்டதுதானாம். ஆனால் அதை இயக்குனர், நடிகருமான தியாகராஜன் தன் மகனுக்காக அபகரித்து சென்று இருக்கிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் தியாகராஜன், இயக்குனர் ராஜு மேனன் இயக்கத்தில் உருவான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் அஜித் வேடத்தில் நடிக்க முதலில் பிரசாந்திடம் தான் கேட்டனர். அந்த நேரத்தில் ஜீன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருந்தது. பிரசாத்திற்கு ஜோடியாக போடப்பட்டிருந்த தபு வயதானவராக காணப்பட்டார்.
இதையும் படிங்க: அஜித் மேல் இப்போ வரைக்கும் கோபம் இருக்கு! என்ன லைலா இப்படி சொல்லிட்டாங்க?
அதனால் அவருக்கு ஐஸ்வர்யாவை ஜோடியாக கேட்டேன். ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளாமல் நாயகனை மாற்றிவிட்டதாக குறிப்பிட்டிருப்பார். ஆனால் அஜித்தின் மிக முக்கிய திரைப்படங்களை பிரசாந்த் தரப்பு தான் தட்டிப் படுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து ஜோடி இயக்குனர் ப்ரவீன் காந்தி பேசும்போது ரக்ஷகன் திரைப்படம் முடிந்த பின்னர் ஜோடி திரைப்படத்தின் கதையை நான் விஜயிற்காக தான் எழுதினேன்.
ஆனால் என்னுடைய தயாரிப்பாளர் முரளி மனோகர் பிரசாந்தை வைத்து இயக்கலாம் என கூறினார். ஏனெனில் அப்போது அவர் ஜீன்ஸ் திரைப்படத்தையும் தயாரித்து வந்தார். ஜோடி படத்தின் கூட்டணியை தெரிந்து கொண்ட தியாகராஜன் தான் தன்னுடைய மகனுக்கு அந்த வாய்ப்பை பறித்துக் கொடுத்தார். அவர்கள் உள்ளே வரவில்லை என்றால் கண்டிப்பாக ஜோடியில் விஜய்தான் நடித்திருப்பார்.
இதையும் படிங்க: அப்போ பிக்பாஸ் இவர் தானா? புரோமோ ஷூட்டில் கசிந்த வீடியோ… பக்காவா இருக்காரே!..
இதுமட்டுமல்லாமல், ஜீன்ஸ் திரைப்படத்திற்கு நாயகன் வேட்டையன் நடக்கும்போது அப்பாஸ் மற்றும் அஜித்தான் பேச்சுவார்த்தையில் இருந்தனர். ஏனெனில் அப்போது அப்பாஸுக்கு காதல் தேசம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருந்தது. பின்னர் அஜித்தை நடிக்க வைக்கலாம் எனவும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்கள் இருவருக்கும் முன்னால் புகுந்த தியாகராஜன் தன்னுடைய மகனுக்கு அந்த வாய்ப்பை வாங்கி கொடுத்தார்.
அந்த சமயத்தில் சங்கர் மணிரத்னம் செய்வதைதான் அப்படியே செய்வார். இதனால் திருடா திருடா திரைப்படத்தில் நாயகனாக நடித்து வந்த பிரசாந்தை அப்படியே தன்னுடைய ஜீன்ஸ் படத்திற்கும் மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. அவர்கள் உள்ளே வரவில்லை என்றால் ஜீன்ஸ் திரைப்படத்தில் அஜித்தான் நடித்திருப்பார் எனவும் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோக்களை வைரலாக்கி வரும் அஜித் ரசிகர்கள் பிரசாந்த் தான் மற்ற நடிகர்களின் வாய்ப்பை பறித்துக் கொண்டதாகவும் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நேத்து மலையாளம் இன்னைக்கு தெலுங்கா… கூலியின் இணைந்த உச்ச நட்சத்திரம்.. சுடசுட அப்டேட்