பிரசாந்தா என் படத்திலையா? யோவ் என்ன பண்ணிட்டு இருக்க… வெங்கட் பிரபுவிடம் அலறிய விஜய்..
Goat: கோட் திரைப்படத்தில் பிரஷாந்த் மற்றும் மோகன் நடிப்பது குறித்து விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் பேசியது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் திரைப்படம் டி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். விஜய், மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க :அவார்டு படம் எடுக்கணும்னு இப்படியா எடுப்பீங்க… கொட்டுக்காளியா… கொட்டும் காளியா?
இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் இதுவரை ஆடியோ ரிலீஸ் குறித்த எந்த ஒரு தகவல்களும் வெளியாகவில்லை. பாடல்களில் படக்குழு நிறைய விமர்சனங்களை தான் குவித்தது. ஆனால் அதற்கெல்லாம் ஈடு செய்யும் விதமாக படத்தின் டிரைலர் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது.
செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் சென்சார் சான்றிதழில் யுஏ கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மூன்று மணி நேரம் ஓடும் இப்படத்தினை எங்கும் சொதப்பாமல் சரியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என படக்குழு தொடர்ந்து முயன்று வருகிறது.
இந்த படங்களைப் போல இல்லாமல் இப்படத்தில் முன்னணி பிரபலங்களின் கூட்டமே அதிகம். இவர்களை எல்லாம் ஒப்பந்தம் செய்யும்போதே வெங்கட் பிரபு விஜயிடம் சென்று பிரபுதேவா, பிரசாந்த், மோகன் எல்லாம் இந்த படத்தில் இருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் அதைக் கேட்ட விஜய் முதலில் யோவ் என்னய்யா பண்ணிக்கிட்டு இருக்க என்றுதான் கேட்டாராம்.
இதையும் படிங்க: அந்த படம் பிரசாந்துக்கு சொன்னது… மொக்க காரணத்தால் மிஸ்ஸான அஜித்தின் சூப்பர்ஹிட் திரைப்படம்..
இவ்ளோ பேரை வைத்து படத்தை எடுத்து முடிச்சிடுவியா? பிரசாந்த் எல்லாம் நான் வரும்போது பெரிய நடிகரா இருந்த வரியா என கேட்டிருக்கிறார். ஆனால் வெங்கட் பிரபு அவங்க கேரக்டர் பிடிக்காமல் நடிக்க ஒத்துப்பாங்களா சார் என கேட்டு அவரை சமாதானம் செய்திருக்கிறாராம். இப்படத்தில் பிரசாந்திற்கு மிக முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.