அஜித் அரசியலுக்கு வருவார்னு ஜாதகத்திலேயே இருக்கு!.. புள்ளி விபரம் சொல்லும் இயக்குனர்...
சாக்லேட் பாயாக சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து காதல் கதைகளில் நடித்து ஒரு கட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மாறியவர்தான் அஜித்குமார். சில படங்களில் ஆக்ஷனில் அதிரடி காட்டிவிட்டு பின்னர் மாஸ் ஹீரோவாகவும் மாறினார். பில்லா மற்றும் மங்காத்தா ஆகிய படங்கள் அதற்கு உதவியது. இந்த 2 படங்களும் அவருக்கு பல ரசிகர்களையும் பெற்று தந்தது.
பொதுவாக ரசிகர் கூட்டம் அதிகமாக வைத்திருக்கும் நடிகர்கள் அரசியல் கட்சி துவங்குவார்கள். ஏனெனில், எம்.ஜி.ஆரை பார்த்து நாமும் தமிழகத்தில் முதலமைச்சராகலாம் என்கிற ஆசை பலருக்கும் உண்டு. ரஜினி, கமல், விஜய் என எல்லோரும் அரசியல் தொடர்பாக தங்களின் ரசிகர்களை கொண்டு வந்தவர்கள்தான்.
இதையும் படிங்க: அடேங்கப்பா!.. அஜித் தெறி மாஸா இருக்காரே!.. கார் அருகே என்னம்மா போஸ் கொடுத்து நிக்கிறாரு ஏகே!..
ஆனால், மிகப்பெரிய ரசிகர் கூட்டம் வைத்திருக்கும் அஜித்துக்கோ அரசியலில் துளி ஆர்வமும் இல்லை. ஓட்டு போடுவதோடு என் அரசியல் முடிந்துவிட்டது என ஒதுங்கியே இருக்கிறார். ஒரு தேர்தலில் அவரின் ரசிகர் மன்றங்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட ஒரே காரணத்திற்காக தனது மொத்த ரசிகர் மன்றங்களையும் கலைத்தவர்தான் அஜித்.
அதோடு, தனக்கு அரசியலில் வரவேண்டும் என்கிற ஆசை எப்போதும் இல்லை என தொடர்ந்து அவர் சொல்லி வருகிறார். ஆனால், எம்.ஜி.ஆரிடம் மக்களுக்கு பிடித்த அந்த முக வசீகரம் அஜித்திடம் இருக்கிறது என சில அரசியல் விமர்சகர்களே சொன்னார்கள். தனது கட்சியில் அஜித்தை இணைக்க ஜெயலலிதாவே முயற்சி எடுத்தார். ஆனால், அஜித் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், ஜோடி பட இயக்குனர் பிரவீன் காந்த் ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘தமிழக அரசியலில் ஒரு பெரும் புள்ளியாக அவர் உருவெடுப்பார் என அவரின் ஜாகத்திலேயே இருக்கிறது. அஜித், விஜய் எல்லாம் எத்தனை வருடமாக சினிமாவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு பின் எவ்வளவு நடிகர்கள் வந்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் இருவரும் இப்போதும் டாப்பில் இருக்கிறார்கள்.
அதற்கு காரணம் வில் பவர்தான். பவர் என்றால் அரசியல்தான். வில் பவர் இருப்பவர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்கள். அஜித் எதிர்காலத்தில் அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கிறது’ என அவர் பேசினார்.