தேசிய விருது ஒன்னும் சும்மா வாங்கல! அமீர் செஞ்ச வேலை - பிரியாமணி வாழ்க்கைல இப்படியெல்லாம் நடந்துருக்கா?

by Rohini |
ameer
X

ameer

Actress Priyamani: குட்டு பட்டாலும் மோதிரக் கையால் குட்டு படவேண்டும் என்று சொல்வார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அறிமுகமான அற்புதமான நடிகைகளில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்திய நடிகைதான் பிரியாமணி. தான் இயக்கிய கண்களால் கைது செய் படத்திற்காக ஒரு கோபக்கார பெண்ணை நடிகையாக தேடிக் கொண்டிருந்தார் பாரதிராஜா.

இயல்பாகவே பிரியாமணி எதையும் எளிதாக எடுத்துக் கொள்பவர். அதே சமயம் கெத்து, கொஞ்சம் திமிருத்தனமான பார்வையும் கொண்டவர். தமிழ் சினிமாவில் எத்தனை அற்புதமான படைப்புகளை கொடுத்தவர் பாரதிராஜா. அவரை பற்றித் தெரிந்திருந்தும் முதன் முதலில் பாரதிராஜாவை பார்ப்பதற்காக பிரியாமணி அவர் தாயாருடன் அலுவலகத்திற்கு வந்தாராம்.

இதையும் படிங்க: விட்டா கீழ கழண்டு விழுந்திடும் போல!.. பாதி மூடி பாடாப்படுத்தும் ஐஸ்வர்யா லட்சுமி..

ஆனால் ஒரு பெரிய இயக்குனர் என்ற அந்த பயம் இல்லாமல் எதார்த்தமாக இருந்தாராம் பிரியாமணி. இதுவே பாரதிராஜாவுக்கு மிகவும் பிடித்துப் போக தன் படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை என்றாலும் பிரியாமணிக்கு ஒரு மைல் கல்லாக இருந்தது பருத்திவீரன் திரைப்படம்.

அமீர் இயக்கிய இந்தப் படத்தில் ஆரம்ப முதல் அமீருக்கும் பிரியாமணிக்கும் இடையே ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுந்து கொண்டே இருந்ததாம். ஏதோ ஒரு கிராமத்துக்கு அழைத்துக் கொண்டு போய் பொட்டல் புதரில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார் அமீர். அப்போது என்ன இயக்குனர் இவர்? இப்படி பாடாய் படுத்துகிறாரே என்றெல்லாம் சண்டை போட்டு பாதியிலேயே போய்விட்டாராம் பிரியாமணி.

இதையும் படிங்க: போகி அன்னிக்கு அவரையும் சேர்த்துக் கொளுத்திடுவேன்! நடிகை பற்றிய பேச்சுக்கு சரமாரி பதிலடி கொடுத்த விஷால்

இருந்தாலும் அமீர் எதற்கும் துணிந்து நான் ஹீரோயின் இல்லாமல் கூட படம் எடுப்பேன் என்று அவரை சமாதானம் பண்ணாமல்தான் இருந்திருக்கிறார். அதன் பிறகு பிரியாமணி சமாதானம் ஆகி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம். மேலும் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி இந்திய சினிமாவையே மிரளவைத்தது.

அந்தக் காட்சியை எடுக்கும் போது 'இதை பற்றியெல்லாம் சொல்லவில்லை' என்று பிரியாமணி கேட்க இதை சொன்னால் ஓடி போயிடுவீங்களே என்று அமீர் சொல்லியிருக்கிறார். இருந்தாலும் படத்தில் அந்தளவுக்கு அநாகரீகமாக இருக்காது. இருந்தாலும் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லாமல்தான் நடித்தாராம் பிரியாமணி.

இதையும் படிங்க: இனிமே என் ஸ்டைலே வேற… சம்பளம் வாங்காமல் பாலசந்தருக்காக ரஜினி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்!

ஆனால் க்ளைமாக்ஸ் காட்சியில் நடித்ததற்குத்தான் அவருக்கு தேசிய விருதே கொடுக்கப்பட்டது. கடைசியாக பிரியாமணிக்கு கொடுக்கவேண்டிய ஒரு லட்சம் ரூபாய் பாக்கி இருந்ததாம். ஆனால் அமீர் அதை இரண்டு லட்சமாக அவர் அம்மாவிடம் கொடுத்தாராம். இந்த சுவாரஸ்ய தகவலை சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார். எல்லாவற்றையும் தாண்டி பிரியாமணி ஒரு தேசிய விருது வாங்கும் நடிகை இல்லை. இன்னும் எத்தனையோ தேசிய விருதுக்கு சொந்தக்காரராக வருபவர். அந்தளவுக்கு நடிக்க கூடிய ஒரு அற்புதமான நடிகைதான் பிரியாமணி.

Next Story