போகி அன்னிக்கு அவரையும் சேர்த்துக் கொளுத்திடுவேன்! நடிகை பற்றிய பேச்சுக்கு சரமாரி பதிலடி கொடுத்த விஷால்

0
329
vishal
vishal

Actor Vishal: தமிழ் சினிமாவில் ஒரு புரட்சித்தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஷால். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் இவருடன் சேர்ந்து எஸ்.ஜே.சூர்யாவும் சரியான மாஸை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்து வந்த விஷாலுக்கு மார்க் ஆண்டனி திரைப்படம் ஒரு  திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அந்தளவுக்கு படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: போகி அன்னிக்கு அவரையும் சேர்த்துக் கொளுத்திடுவேன்! நடிகை பற்றிய பேச்சுக்கு சரமாரி பதிலடி கொடுத்த விஷால்

பொதுவாகவே விஷால் என்றாலே ஏகப்பட்ட கிசுகிசுக்களுக்கு பேர் போனவராக வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் இதுவரை அவர் பற்றி எந்த கிசுகிசுக்களுக்கும் அவர் கவலைப்பட்டதில்லை. ஆனால் சமீபத்தில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ஆதங்கத்தை பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து ஊடகங்களில் விஷால் பற்றியும்  லட்சுமி மேனனைப் பற்றியும் கிசுகிசுக்கள் வந்தவண்ணம் இருந்தன. அதற்கு பதிலளிக்கும் வகையில் ஒரு நடிகை என்பதையும் தாண்டி லட்சுமி மேனன் ஒரு பெண். அவங்களுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்தமாதிரி செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் எங்கள் நட்புக்கு ஒரு விரிசலை ஏற்படுத்துவதாக இது அமையும் என்றும் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: இனிமே என் ஸ்டைலே வேற… சம்பளம் வாங்காமல் பாலசந்தருக்காக ரஜினி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்!

இந்த நிலையில் நேற்று ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி அளித்த விஷாலிடம் ஒரு ஆடியோ க்ளிப்ஸ் காண்பிக்கப்பட்டது. அதில் பயில்வான் ரெங்கநாதன்  ‘விஷால் லட்சுமி மேனனை காதலித்து திருமணம் வரை சென்று கடைசியில் அவர்கள் திருமணம் நின்று விட்டது. அதன் பிறகு  லட்சுமி மேனன் ஊருக்கு சென்றார். அங்கு போய் குண்டாகிவிட்டார்’ என்று பேசியிருந்தார்.

அதை கேட்ட விஷால் வரும் போகி அன்னிக்கு பழைய பொருள்களுடன் சேர்த்து அவரையும் சேர்த்து கொளுத்த வேண்டும் என்று தான் என் ஆசை . யாரும் யாரை பற்றியும் பேசலாம். ஆனால் அதற்கு ஒரு எல்லை இருக்கிறது.  இவரெல்லாம் பூமிக்கு பாரமாக இருக்கிற ஆளு. இவருக்கும் மனைவி இருப்பார். மகள்கள் இருப்பார்கள். அப்படி இருக்கும் போது தேவையில்லாமல் ஒரு பெண்ணை பற்றி இப்படியெல்லாம் பேசுவது மிகவும் அநியாயம் என்று கூறினார்.

இதையும் படிங்க: தலைப்பே வேற லெவல்!.. ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட் கொடுத்த நயன்!.. வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!…

google news