செல்லம் சும்மா அள்ளுதோ போ!.. விண்டேஜ் லுக்கில் வெறியேத்தும் பிரியங்கா மோகன்!...
Priyanka mohan: கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர் பிரியங்கா மோகன். பெங்களூரில் இன்ஜினியரிங் படித்தார். பிரியங்கா முதலில் நடித்தது ஒரு கன்னட படத்தில்தான். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். முதல் படமே நானியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கேங்லீடர் என்கிற அந்த படம் வெற்றி பெற்றது.
அதன்பின் மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்தார். தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படத்தில் நடித்தார். நெல்சன் இயக்கிய அந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 100 கோடி கிளப்பில் இணைந்தது. எனவே, பிரியங்காவுக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது.
மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்தில் நடித்தார். ஒருபக்கம், சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். இந்த படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும் பிரியங்காவுக்கு பேரை வாங்கி தந்தது. அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் படத்திலும் நடித்தார்.
இந்த படத்தில் வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் புரட்சிப்பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். இப்போது ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதோடு, அழகை வெவ்வேறு ஆங்கிளில் காட்டி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகி|றார்.
இந்நிலையில், விண்ட்டேஜ் லுக்கில் அழகை காட்டி பிரியங்கா மோகன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.