More
Categories: Cinema News latest news

ஆசைப்படலாம்!.. அதுக்குன்னு பேராசை படக்கூடாது.. கேப்டன் மில்லர் ஹீரோயினை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!..

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் ஹீரோயின் ஆக நடித்துள்ள நடிகை பிரியங்கா மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தமிழ் மற்றும் தெலுங்கில் தாம் இன்னும் யாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற பெரிய லிஸ்ட்டை போட்டுள்ளார்.

செம க்யூட்டாக இளைஞர்களை கவரும் விதமாக அப்படியே லட்டு போல இருக்கும் நடிகை பிரியங்கா மோகன் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படத்தை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்திலும் பிரியங்கா மோகன் நடித்திருந்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: உலகநாயகனோ நவரச நாயகனோ… ஆளவிடுங்கடானு கும்பிடு போட்ட பிரபல நடிகை… ஏன்னு தெரியுமா?…

அடுத்தடுத்து சிவகார்த்திகேயனின் இரண்டு படங்களில் நடித்த பிரியங்கா மோகனை நடிகர் தனுஷ் தனது கேப்டன் மில்லர் படத்தின் ஹீரோயின் ஆக மாற்றினார். ஆனால், கேப்டன் மில்லர் படத்தில் தனுசுக்கு ஜோடியாகவே அவர் நடித்திருக்க மாட்டார். பிரியங்கா மோகனின் டிராக்கே தனியாகவும் வித்தியாசமாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கும். மேலும், இந்த ஆண்டு பிரியங்கா மோகன் அடுத்து பவன் கல்யா்ணின் ஓஜி மற்றும் ஜெயம் ரவியின் பிரதர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

கேப்டன் படத்தில் துப்பாக்கி எல்லாம் எடுத்துக்கொண்டு ஆவேசமாக இவர் சுடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரியங்கா மோகன், அடுத்தடுத்து யாருடன் நடிக்க வேண்டும் ஆசைப்படும் பட்டியலை வெளியிட்டுள்ளார். தமிழில் சூர்யாவுடன் நடித்த பிரியங்கா மோகன் அடுத்தவரது தம்பி கார்த்தியுடன் நடிக்க வேண்டும் என்றும் தளபதி விஜயுடன் நடிக்க வேண்டும் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதுவே பெரிய பாக்கியம் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:  ஸ்ரீலங்காவில் விஜயிற்கு காத்திருக்கும் ஆபத்து!…. பிரம்மாண்ட ஆசையில் மண்ணை போடும் வெங்கட் பிரபு!

அதுமட்டுமின்றி தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றும், பிரபாஸ், ராம்சரண், அல்லு அர்ஜுன் என பெரிய லிஸ்ட் போட்டுக்கொண்டே போகும் அந்த வீடியோவை ஷேர் செய்து ரசிகர்கள் நக்கல் அடித்து வருகின்றனர்.

Published by
Saranya M

Recent Posts