More
Categories: Cinema News latest news

“செல்வராகவன் எங்களை நடுத்தெருவுல நிறுத்தி… மொத்தமும் காலி”… கொந்தளித்த தயாரிப்பாளர்

“காதல் கொண்டேன்” என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனது முதல் திரைப்படத்தின் மூலம் பல இளைஞர்களை கவர்ந்தார் செல்வராகவன். குறிப்பாக நடிகர் தனுஷுக்கு அத்திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் வேற லெவலில் ஹிட் அடித்தது.

Advertising
Advertising

அதனை தொடர்ந்து “7ஜி ரெயின்போ காலனி” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படமும் மாபெரும் ஹிட் அடித்தது. இத்திரைப்படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசை என்பதால் செல்வா-யுவன் காம்போ ஒரு பிரபலமான காம்போவாக அறியப்பட்டது.

“7ஜி ரெயின்போ காலனி” திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு செல்வராகவன் தனுஷை வைத்து “புதுப்பேட்டை” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும் படம் சரியாக எடுபடவில்லை. அதன் பின் “ஆயிரத்தில் ஒருவன்”, “மயக்கம் என்ன”, “இரண்டாம் உலகம்”, “என் ஜி கே”, “நெஞ்சம் மறப்பதில்லை” என எதை தொட்டாலும் ஃப்ளாப் ஆனது.

தற்போது செல்வராகவன் தனுஷை வைத்து “நானே வருவேன்” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வருகிற 29 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செல்வராகவன் “சாணி காயிதம்”, “பீஸ்ட்” போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் நடிப்பில் “பகாசூரன்” திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன், “செல்வராகவன் பல இயக்குனர்களை காலி செய்திருக்கிறார். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை தயாரித்தவர் காலி ஆகிவிட்டார். மிகவும் அற்புதமான தயாரிப்பாளர் அவர். பல குடும்பங்களை திட்டம் போட்டு அழித்த இயக்குனர்கள் பலர் இங்கு உண்டு.

தனக்கு பணம் போட்ட தயாரிப்பாளர் நன்றாக இருக்கவேண்டும் என்று இப்போதுள்ள இயக்குனர்கள் பலரும் நினைப்பதே இல்லை. ஹீரோ நன்றாக இருக்கவேண்டும், ஹீரோயின் நன்றாக இருக்கவேண்டும் என்று தான் நினைக்கிறார்கள்” என கொந்தளித்தார்.

தயாரிப்பாளர் கே ராஜன், தனக்கு தோன்றிய விஷயங்களை வெளிப்படையாக பேசுபவர். ஆதலால் சில சர்ச்சைகளும் வெடிப்பது உண்டு. இந்த நிலையில் தான் செல்வராகவன் குறித்து அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் மீண்டும் வைரல் ஆகி வருகிறது.

 

Published by
Arun Prasad