Categories: latest news

மகிழ் பத்தி உண்மையை சொல்லியிருந்தால் அவன் லைஃபே காலி! கொந்தளிப்பில் தயாரிப்பாளர்

Magizh Thirumeni: தமிழில் ஒரு சில ஆகச் சிறந்த இயக்குனர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் மகிழ் திருமேனி. செல்வராகவன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மகிழ்திருமேனி அவரின் கெரியரில் 5 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

அதில் மிகவும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது தடையற தாக்க, மீகாமான், தடம், கழகத் தலைவன். இதில் அவருடைய முதல் படமாக அமைந்தது முன் தினம் பார்த்தேனே. இந்த படத்தை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். முற்றிலும் புது முகங்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் லொகேஷனுக்காக மகிழ் திருமேனி வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க: அஜீத்துக்கு இனி அந்த விஷயம் எடுபடாது… ரசிகர்களை பத்திக் கொஞ்சம் கூட கவலை இல்லையே.. பிரபலம் விளாசல்

இதனால் தயாரிப்பு தரப்பில் ஏகப்பட்ட பொருள் செலவு ஆனது தான் மிச்சம். அதனால் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனுக்கும் மகிழ் திருமேனிக்கும் இடையே ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட பெரும் பொருளாதார நெருக்கடியில் தள்ளப்பட்டு இருக்கிறார் மாணிக்கம் நாராயணன். முன் தினம் பார்த்தேனே  படத்தை பொருத்தவரைக்கும் அதனுடைய லொகேஷன் எல்லாம் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.

சமீப காலமாக தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் மகிழ் திருமேனியை பற்றி பல பேட்டிகளில் வறுத்தெடுத்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் அவர் கூறிய ஒரு தகவல் ஆச்சரியத்தை வரவழைத்து இருக்கிறது. முன் தினம் பார்த்தேனே படத்தை பார்த்த ஜெயம் ரவியின் அப்பா மோகன் இந்தப் படத்தின் லொகேஷன் மிக அருமையாக இருக்கிறது. எங்கு எடுத்தீர்கள் என மாணிக்க நாராயணனிடம் கேட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: இளையராஜா ஒரு பைசா கூட உதவி பண்ணல!.. மஞ்சுமல் பாய்ஸ் விவகாரம் இதுதான் பிரச்சனை.. பிரபலம் தகவல்!..

அதற்கு மாணிக்கம் நாராயணன் லொகேஷன் நன்றாக இருக்கும். ஆனால் படம் மொக்க என சொல்லி இருக்கிறார். அதைப்போல மகிழ் திருமேனியுடன் முதன் முதலில் அருண் விஜய் இணைந்து பணியாற்றிய திரைப்படம் தடையறத் தாக்க. இந்த படத்தில் அருண் விஜய் ஒப்பந்தமானதும் முதன் முதலில் மாணிக்கம் நாராயணனுக்கு தான் போன் செய்து  ‘மகிழ்திருமேனி என்ற இயக்கனருடன் நான் படம் பண்ண இருக்கிறேன். அவர் எப்படிப்பட்டவர்’ என கேட்டிருக்கிறார்.

இதைப் பற்றி அந்த பேட்டியில் கூறிய மாணிக்கம் நாராயணன்  ‘அன்றைக்கு மட்டும் அருண் விஜய் இடம் மகிழ் திருமேனியை பற்றி நான் உண்மையை சொல்லி இருந்தால் இன்று அவனுடைய லைப்பே டோட்டலாக காலியாயிருக்கும். ஆனால் நான் அப்படிப்பட்ட நபர் இல்லை. மகி திருமேனியை பற்றி மிகப் பெருமையாக தான் கூறினேன். இரும்பு குறளுக்கு சொந்தக்காரன். எதையும் சரியான நேரத்தில் முடிவு எடுப்பவன். திறமைசாலி என பெருமையாகத்தான் கூறினேன். ஆனால் எனக்கு செய்த துரோகத்தை மனதில் வைத்து அவனைப் பற்றி உண்மையைச் சொல்லி இருந்தால் இன்று அவன் சினிமாவிற்குள்ளேயே இந்த அளவு வளர்ந்து இருக்க முடியாது’ என மிகவும் கொந்தளிப்பில் கூறினார் மாணிக்கம் நாராயணன்.

இதையும் படிங்க: சாப்பிட வந்த ரஜினி… தலைதெறிக்க ஓட விட்ட ஓட்டல் உரிமையாளர்…

Rohini

Recent Posts

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

10 minutes ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

6 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

7 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

7 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

7 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

10 hours ago