ரவீந்தர் வழக்கில் சிக்கியுள்ள மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம்! விக்ரமை வைத்து படம் எடுத்தவருக்கு இந்த நிலைமையா?
Producer Ravindran: திடக் கழிவை எரிவாயுவாக மாற்றும் திட்டத்தில் 15.83 லட்சம் கோடி மோசடி செய்ததாக பிரபல சின்னத்திரை நடிகையின் கணவரும் தயாரிப்பாளருமான ரவீந்திரன் சமீபத்தில் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 1 மாத காலம் சிறைத்தண்டனை அனுபவித்து ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்.
வந்த வேகத்தில் இதற்கெல்லாம் யார் காரணம்? எதற்கான என் மீது வழக்குகள் போடப்பட்டது? அவரிடம் இருக்கும் ஆதாரம் என வரிசையாக பல திடுக்கிடும் தகவல்களை ஒவ்வொன்றாக பேட்டிகளில் கூறிவருகிறார்.
இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: மீனா வாழ்க்கைக்கு சூனியம் வச்சிட்டியேமா.. கல்யாணத்துக்கு ஆள் பார்த்த ரவி..!
ஈஸ்வரன் பட தயாரிப்பாளரான பாலாஜிதான் ரவீந்திரன் மீது புகார் கொடுத்த நபர். அந்த திடக்கழிவை எரிவாயுவாக மாற்றும் திட்டத்தில் ரவீந்திரன் கூறியதாக சொல்லி 15.83 கோடியை முதலீடு செய்ததாகவும் ஆனால் அதை ரவீந்திரன் மோசடி செய்ததாகவும் கூறி வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் பாலாஜி இதுவரை காட்டவில்லை என்றும் ஒருவேளை அது உண்மை என்றால் என் மெயில் ஐடியில் இருந்தோ அல்லது என வங்கிக் கணக்கில் இருந்து அவர் வங்கிக் கணக்கிற்கோ அது சம்பந்தமான எதாவது ஒரு ஆதாரம் இருக்கும் அல்லவா? ஆனால் இல்லையே.
இதையும் படிங்க: ஆசையா கேட்ட சிவாஜி.. அதிர்ச்சியான ரஜினி.. ஆனா செஞ்சாரு பாருங்க அதான் சூப்பர்ஸ்டார்!..
இது முழுக்க முழுக்க திட்டமிட்டு போடப்பட்ட வழக்கு என்றும் என்னிடம் ஏகப்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றது என்றும் அதை ஒவ்வொன்றாக எடுத்து வெளியிடுகிறேன் என்றும் கூறி மேலும் ஒரு திடுக்கிடும் தகவலை கூறினார்.
பாலாஜியுடன் சேர்ந்து ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனமும் இதில் ஈடுபட்டிருக்கிறது என்றும் அந்த நிறுவனம் விக்ரம் போன்ற பல முன்னனி நடிகர்களை வைத்து படம் எடுத்த நிறுவனம் தான் என்றும் கூறியிருக்கிறார். இது சம்பந்தமான வழக்கு இப்போது நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தெளிவாக என்னால் சொல்ல முடியாத நிலைமையில் இருப்பதாகவும் ரவீந்திரன் கூறினார்.
இதையும் படிங்க: எப்பா கடவுளே இது ஒன்னு மட்டும் போதும்! ஆண்டவனிடம் ரஜினிக்கு இருக்கிற ஒரே வேண்டுதல் இதுதானாம்