தக் லைஃப் படம் இப்படித்தான் வந்துருக்காம்...! எடுக்கப்பட்ட வரையில் பார்த்ததும் தயாரிப்பாளர் சொன்ன அப்டேட்..!

THuglife
நாயகன் படத்திற்குப் பிறகு 36 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம், கமல் கூட்டணி தக் லைஃப் படத்தில் தான் இணைந்துள்ளது.
மணிரத்னமும், கமலும் நீண்ட இடைவெளிகளுக்குப் பிறகு இணைந்துள்ளதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதனால் அவர்களுக்குள் இந்தப் படத்தை எப்படி உருவாக்கணும்னு பேசிப் பேசி அதற்கேற்ப வடிவமைத்து வருகிறார்களாம். அதனால் இந்தப் படம் உலகளவில் பிரமாதமாக இருக்கும் என்று தயாரிப்பாளர் சிவா தெரிவித்துள்ளார்.
கமல், திரிஷா, சிம்பு, அசோக் செல்வன், நாசர், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து வருகிறார். படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Manirathnam, Kamal
இந்தப் படத்தில் அதன் தொடர்ச்சியாக நடிகர் சிம்புவின் மாஸ் இன்ட்ரோ கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிம்புவுக்கு இவ்ளோ பெரிய மாஸா என காட்டி வியக்க வைத்தது. படம் இதுவரை எப்படி வந்துள்ளது என்பதைப் படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான சிவா ஆனந்த் இப்படி சொல்கிறார்.
தக் லைப் படத்தை டைரக்டர் மணிரத்னம், கமல், மகேந்திரன், சிவா ஆனந்த் என நால்வர் தயாரித்து வருகின்றனர். இந்தப் படம் பற்றி தயாரிப்பாளர் சிவா சொல்வது என்னன்னா இந்தப் படம் பிரமாதமா வந்துருக்கு. மணிரத்னம், கமல் இருக்கும் இந்தப் படத்தில் நானும் இருக்கணும்னு நினைச்சேன்.
இது முதல் படம் மாதிரி இருக்குமா அல்லது வேறு மாதிரி இருக்குமா என அவரிடம் சிலர் கேட்டார்களாம். இது எங்களையும் மிஞ்சி பிரமாதமா வந்துருக்கு. படம் எடுக்கப்பட்ட வரையில் பார்த்த போது ரொம்ப பிரமிப்பா இருக்கு. உலகப்படங்களில் பிரமாதமாகப் பேசப்படும் என்பதை வெறும் வார்த்தையால சொல்லல. சத்தியம் பண்ணி சொல்றேன் என்கிறார்.
1987ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான நாயகன் படத்தில் கமல் சிறுவயது முதல் வயதான முதியவர் தோற்றம் வரை காட்சிக்குக் காட்சி நடிப்பில் புதுப்புதுப் பரிணாமங்களைக் காட்டி அசத்தியிருந்தார். அதனால் தான் அந்தப் படம் இன்று வரை பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே பிரமாதம்.