பின்வாங்கும் புஷ்பா 2!. ஆகஸ்டு 15-க்கு களமிறங்கும் இரண்டு முக்கிய படங்கள்!...
பொதுவாக சினிமா உலகில் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற விடுமுறை நாட்களில் பெரிய நடிகர்களின் படங்களை வெளியிட திட்டமிடுவார்கள். அதற்கு காரணம் 3, 4 நாட்கள் தொடர்விடுமுறயில் படத்தை வெளியிடும்போது நல்ல வசூலை பெறும் என்பதுதான் கணக்கு. முன்பெல்லாம் எம்,ஜி.ஆர், சிவாஜி படங்கள் இப்படித்தான் வெளியாகி வந்தது.
அவர்களுக்கு பின் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோரின் படங்களும் இப்படி தீபாவளி, பொங்கலை குறி வைத்து வெளியாகி நல்ல வசூலை பெற்றது. இப்போது விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்கள் பண்டிகை நாட்களில் வெளியாகி வருகிறது. இது ஒருபக்கம் எனில், அப்படி பண்டிகை நாட்களில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது சின்ன நடிகர்களின் படங்கள் தள்ளி போய்விடும்.
ஏனெனில், அதிகமான தியேட்டர்கள் பெரிய நடிகர்களுக்கு போய்விடும். எனவே, நமக்கு தியேட்டர்கள் கிடைக்காது என்பதுதான் காரணம். எனவே, ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். பாகுபலி படத்திற்கு பின் தெலுங்கு மற்றும் கேஜிஎப் போல கன்னட படங்களும் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வசூலை பெற துவங்கிவிட்டது.
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான புஷ்பா திரைப்படம் தமிழ்நாட்டிலும் சூப்பர் ஹிட் அடித்ததால் இப்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது இப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்டு 15ம் தேதி இப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இன்னும் 35 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது. அதன்பின் மற்றவேலைகளை முடித்து திட்டமிட்டபடி வெளியிட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, டிசம்பர் 24ம் தேதி இப்படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. புஷ்பா 2 பட ரிலீஸ் தள்ளிபோவதால் விக்ரமின் தங்கலான் படமும், பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படமும் ஆகஸ்டு 15ம் தேதி வெளியாகவுள்ளது என செய்திகள் கசிந்திருக்கிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல், பாலாவுக்கு பல வருடங்களுக்கு பின் வணங்கான் படம் கை கொடுக்குமா என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.