தனுஷ் தற்போது தனது 50 வது படத்தில் நடித்து இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யாவும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஒரு காலத்தில் அண்ணன் இயக்கத்தில் தனுஷ் நடித்து பிரபலமானார். ஆனால் இப்போது அண்ணனையே இயக்கும் அளவு வளர்ந்து விட்டார். இது பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் டிரைலர் பற்றியும் படத்திற்கான வெற்றி வாய்ப்புகள் குறித்தும் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்கிறார்னு பார்ப்போமா…
இது அண்ணன் தம்பி கதை. இதுல அண்ணன் யாரு? எஸ்.ஜே.சூர்யாவா இல்ல செல்வராகவனே தானான்னு தெரியல. செல்வராகவனைப் பொருத்தவரை அவரு முகம் வில்லனுக்கு நல்லா ஒத்து வரும். அவரு ஏன் இவ்ளோ நாளா நடிக்காம இருந்தாருன்னு தெரியல. அதை தனுஷ் ரொம்ப அழகாப் பயன்படுத்தி இருக்காருன்னு நினைக்கிறேன்.

தனுஷ்க்கு இது 50வது படம். பெரிய நடிகர்களுக்கு 25, 50, 75 எல்லாம் கண்டம்னு சொல்வாங்க. ரஜினி, கமலுக்கு எல்லாம் 100வது படம் போகல. இது மாதிரி சொல்வாங்க. மங்காத்தா அஜீத்துக்கு 50வது படம் மிகப்பெரிய ஹிட். விஜய் சேதுபதிக்கு மகாராஜா 50வது படம். மிகப்பெரிய ஹிட். தனுஷ்க்கு இது 50 வது படம். எழுதி, இயக்கி, நடிச்சிருக்கார். அதனால தனுசுக்கு 50வது படம் ஹிட்டாக நிச்சயமா வாய்ப்பு இருக்கு. டிரைலர் பார்க்கும்போது தெரியுது.
சன் பிக்சர்ஸ் தனுஷை வச்சி டைரக்ஷன் பண்றதுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்துருக்காங்க. போயஸ் கார்டன்ல தனுஷ் இன்னும் குடிபோகலையான்னு கேட்டதுக்கு இப்படி பதில் சொல்கிறார் அந்தனன்.
தனுஷ் மனைவி ஒரு இடத்துல இருக்காங்க. அப்பா, அம்மா வேற இடத்துல இருக்காங்க. பிள்ளைங்க ஒரு இடத்துல இருக்கு. ஆனா அவரு தினமும் அந்தப் புது பங்களால தான் இருக்காரு. பெரிய பங்களா. இன்னைக்குக் காலைல இங்க கிளம்புனீங்கன்னா நாளைக்கு சாயங்காலம் தான் கிச்சனுக்குப் போய் சேருவீங்க. அப்படி பெரிய பங்களா. வீட்டுல யாருமே இல்லன்னா அது என்னன்னு புரியல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
