என்கிட்ட அப்படி சொன்னாரு!.. அதனால விஜய பார்க்க போகவே இல்ல!.. ராதாரவி கோபம்!..
Vijay: தமிழ் சீனியர் நடிகராக இருப்பவர் ராதாரவி. புரட்சி நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகன் என்கிற அடையாளத்துடன் சினிமாவுக்கு வந்தாலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திகொண்டவர். கடந்த 40 வருடங்களுக்கும் மேல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பல நூறு படங்களில் கலக்கியவர்.
டெரர் வில்லனாக பல படங்களில் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார். ரஜினி, விஜயகாந்த் படங்களில் அதிகம் நடித்திருக்கிறார். ரஜினியுடன் குரு சிஷ்யன், பணக்காரன், ராஜாதி ராஜா, உழைப்பாளி, அண்ணாமலை, முத்து, படையப்பா, பாபா, லிங்கா என பல படங்களில் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: மோகன்லால் ஏன் விலகணும்? ரூபஸ்ரீக்கு நடந்த அக்கிரமத்தைப் பாருங்க…
கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் எல்லா நடிகர்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார். அதன்பின் விஷாலின் டீம் அதை கைப்பற்றியது. இப்போது டப்பிங் யூனியனின் தலைவராக இருக்கிறார் ராதாரவி. பல வருடங்களாக இந்த பதவி அவரிடம் இருக்கிறது.
நடிகர் விஜயகாந்துக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர். விஜயகாந்தின் பெரும்பாலான படங்களில் நடித்திருக்கிறார். விஜயகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டு பேச முடியாமல் வீட்டில் இருந்தது முதலே அவரை சந்திக்க பிரேமலதாவிடம் அனுமதி கேட்டார். ஆனால், கடைசிவரை கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: விஜய்கிட்ட இத எதிர்பார்க்கவே இல்ல.. மூத்த நடிகருக்கே இப்படி ஒரு நிலைமையா?
நடிகர் விஜய் அறிமுகமான முதல் படமான நாளைய தீர்ப்பு படத்தில் அவரின் அப்பாவாக நடித்தார். அதன்பின் சர்கார் படம் வரை பல படங்களிலும் அவருடன் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு தளங்களில் ராதாரவியுடன் நெருக்கமாகவே பழகுவார் விஜய். ஆனால், சமீபத்தில் ராதாரவி கொடுத்துள்ள பேட்டி வேறு மாதிரி இருக்கிறது.
என் பேரன் விஜயின் தீவிரமான ரசிகன். சர்கார் படத்தில் நடிக்கும்போது என் பேரனின் குடும்பத்தையே கூட்டிட்டு போய் விஜயை சந்திக்க வைத்து அவருடன் போட்டோவும் எடுக்க வச்சேன். சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் நான் மயங்கி விழுந்தபோது விஜய்தான் என்னை தாங்கி பிடித்தார்.
அதற்கு நன்றி சொல்லலாம்னு அவர் பி.ஏ-வுக்கு போன் பண்ணேன். அவர் ‘விஜய் வர சொல்லிட்டாரு. ஆனா போனமுறை மாதிரி எல்லாத்தையும் கூட்டிட்டு வராதீங்க’ன்னு சொன்னாரு. நான் வரலன்னு சொல்லிடுப்பான்னு சொல்லிட்டேன்’ என ராதாரவி கூறியிருக்கிறார்.