Cinema News
நாட்டாமை உருள தண்டம் போட்டதெல்லாம் வீணாப்போச்சே!.. தோல்வி முகத்தில் ராதிகா சரத்குமார்…
நடிகர் சரத்குமார் சினிமாவில் ஹீரோவாக நடித்து பீக்கில் இருந்தபோதே அரசியலிலும் களம் இறங்கினார். துவக்கத்தில் திமுகவில் இருந்தார். அதன்பின் மனக்கசப்பு ஏற்பட்டு அதிமுக பக்கம் போனார். சில வருடங்கள் அந்த கட்சியில் இருந்துவிட்டு கட்சியிலிருந்து விலகினார். அதன்பின் தனியாக கட்சியும் துவங்கினார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என பெயர் இருந்தாலும் தமிழகத்திலேயே அவரின் கட்சி போணியாகவில்லை. 2001 முதல் 2006 வரை எம்.பி.யாக இருந்தார். அதோடு சரி. அதன்பின் அவருக்கு அரசியலில் பெரிய பதவிகள் கிடைக்கவில்லை. அவரும் மீட்டிங், பிரஸ் மீட் என கொடுத்து பார்த்தார்.
இதையும் படிங்க” என்னை காமெடியன்னு நினைச்சியா?!.. சிவகார்த்திகேயனை ஓவர் டேக் செய்த சூரி.. கருடன் வசூல் இதுதான்!..
ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. மாறாக, சமூகவலைதளங்களில் கிண்டலுக்கும் ஆளானார். குறிப்பாக இரவு 2 மணிக்கு மனைவி ராதிகாவுடன் சொல்லிவிட்டு தனது கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக முடிவெடுத்ததாக அவர் செல்லியது கடுமையான கிண்டலுக்கு உள்ளானது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் ராதிகாவுக்கு விருதுநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. எனவே, ராதிகாவும் சரத்குமாரும் அந்த தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்தனர். அதே தொகுதியில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும் தேமுதிக சார்பில் போட்டியிட்டார்.
இந்நிலையில், இன்று காலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இதில், துவக்கம் முதலே விஜய பிரபாகரன் முன்னிலை வகித்து வருகிறார். ராதிகாவை விட சில ஆயிரம் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விஜயபிரபாகரன் முன்னிலை வகித்து வருவதால் அவரே அந்த தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.
மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சரத்குமார் நேற்று கோவிலில் அங்க பிரதட்சணம் செய்தார். இந்த வீடியோவும் வெளியாகி வைரலானது. ஆனால், ராதிகா தொடர்ந்து பின்னடவை சந்தித்திருப்பது சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.