என்கூட நடிக்க அவங்கதான் தயாரா வரனும்! அஜித்தை பற்றி ராதிகா சொன்ன விஷயம்

by Rohini |   ( Updated:2024-05-16 10:40:04  )
radhika
X

radhika

Actress Radhika: தமிழ் சினிமாவில் 80களில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ராதிகா. ஆனால் இவர் முதன் முதலில் அறிமுகமாகும் போது இவரெல்லாம் ஒரு நடிகையா? நடிகை தகுதியே இல்லையே என்றெல்லாம் பல விமர்சனங்கள் வந்தன. அந்த அளவுக்கு கருப்பாகவும் குண்டாகவும் தெரிந்தார் ராதிகா. ஆனாலும் பாரதிராஜா என்னுடைய செலக்சன் சரியாகத்தான் இருக்கும் என்பதை நிரூபித்து காட்டினார்.

ராதிகா நடித்த முதல் படமான கிழக்கே போகும் ரயில் திரைப்படம் எந்த அளவு ஒரு வெற்றியை பெற்றது என அனைவருக்கும் தெரியும். அந்தப் படத்தில் ராதிகாவின் நடிப்பை தான் அனைவரும் பாராட்டினர். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த ராதிகாவை பேரும் புகழும் தேடி வந்தது. நடிப்பின் இளவரசி என்ற அடைமொழியும் அவரை வந்து சேர்ந்தது.

இதையும் படிங்க: இரண்டு இயக்குனர்கள் மாறி!.. நம்பிக்கை இல்லாமல் ரஜினி நடித்த திரைப்படம்!.. அட அந்த சூப்பர் ஹிட் படமா?!..

அந்த அளவுக்கு எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் தன்னை மெருகேற்றி நடிப்பவர். இன்று அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து வருகிறார் ராதிகா. இந்த நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதில் விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி இவர்களுக்கு அம்மாவாக நடித்தபோது எந்த நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் போது சூட்டாக இருந்தது என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? என கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த ராதிகா விஜய் கூட நடித்து விட்டேன். சூர்யாவுக்கும் நடித்து விட்டேன். விஜய் சேதுபதிக்கும் நடித்து விட்டேன். ஆனால் அஜித்துக்கு அம்மாவாக இதுவரை நடிக்கவில்லை. அதுதான் நான் மிஸ் பண்ண வாய்ப்பு என கூறினார். மேலும் அந்தக் கேள்விக்கு பதில் சொன்ன ராதிகா இவர்களில் யாருக்கு அம்மாவாக நடிக்க தகுதி இருக்கு என கேட்காதீர்கள்? எனக்கு மகனாக நடிக்க இந்த நடிகர்களில் யாருக்கு தகுதி இருக்கு என்று கேளுங்கள் என மிகவும் கர்வமாக பதில் கூறினார் ராதிகா.

இதையும் படிங்க:தன்னுடைய நரி வேலையை காட்டிய கோபி… அப்போ நீங்க இன்னமும் திருந்தலையா?

Next Story