நல்லாதானே போச்சு..! ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றியில் மீண்டும் பழைய ரூட்டுக்கே திரும்பும் லாரன்ஸ்.. அலறும் ரசிகர்கள்..!

by Akhilan |
நல்லாதானே போச்சு..!  ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றியில் மீண்டும் பழைய ரூட்டுக்கே திரும்பும் லாரன்ஸ்.. அலறும் ரசிகர்கள்..!
X

Raghava Lawrence: டான்ஸராக சினிமாவில் அறிமுகமானவர் தான் ராகவா லாரன்ஸ். கிட்டத்தட்ட இவரை பலரும் குட்டி பிரபுதேவாவாகவே பார்த்தனர். டான்ஸில் இருந்து அவரின் ரூட்டை நடிப்புக்கு மாற்றினார். நல்ல ரீச் கொடுக்க தொடர்ந்து சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.

அற்புதம் படம் தான் ராகவா லாரன்ஸுக்கு முதல் படம். ஹீரோவாக நல்ல பெர்மான்ஸ் காட்டியவரை பார்த்து பலரும் மிரண்டனர். அதனால் அவருக்கு வாய்ப்புகளும் வந்தது. ஆனால் முதல் படம் கொடுத்த ரீச்சை அவரால் பிடிக்க முடியவில்லை.

இதையும் படிங்க: இதுதான் கடைசி… இனிமே பிக்பாஸ் பக்கமே வரமாட்டேன் போங்கடா… கடுப்பான கமல்ஹாசன்..!

அதை தொடர்ந்து அவர் நடித்த முனி திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அப்படத்தினை லாரன்ஸே இயக்கி நடித்து இருந்தார். இதனால் தன்னுடைய ரூட்டை பேய் படங்களுக்காக மாற்றி அமைத்தார். அடுத்து காஞ்சனா என்ற பெயரில் மீண்டும் ஒரு பேய் படத்தினை இயக்கினார்.

இதில் நடிக்க மட்டும் இல்லாமல் தயாரிக்கவும் செய்தார். படம் மிகப்பெரிய ரீச்சை கொடுத்தது. சூப்பர்டூப்பர் ஹிட் ஆனது. இதனால் அடுத்தடுத்து இரண்டு பாகங்களை இயக்கினார். ஆனால் அப்படங்கள் முதல் பாகத்தினை போல இல்லாமல் இருந்தது. ஆனால் நல்ல வசூலை கொடுத்தது.

இதையும் படிங்க: சும்மா இல்லாம போய் குட்டு வாங்கிட்டு வந்த மன்சூர் அலிகான்.. த்ரிஷா வழக்கில் என்ன நடந்தது தெரியுமா?

இதனை தொடர்ந்து கொஞ்ச நாளைக்கு தன்னுடைய இயக்கத்தினை தள்ளி வைத்தார். பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி2 படத்தில் நடித்தார். படம் சுமார் வெற்றியையும், வசூலையும் பெற்றது. அடுத்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்து இருந்தார்.

அவரின் கேரியரிலேயே பெஸ்ட் படம் என தற்போது அந்த படத்தினை ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு நடித்து இருந்தார். அடுத்தடுத்த பெரிய பட வாய்ப்புகள் கூட அவருக்கு வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் மீண்டும் லாரன்ஸ் இயக்கி நடிக்கும் வேலையில் இருக்கிறாராம்.

இதற்காக பாண்டிச்சேரியில் கதை தேர்வு நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. நல்லா தானே போச்சு. ஏன் இந்த திடீர் முடிவு என ரசிகர்களும் கேள்வி எழுப்புகின்றனர். வேணாமே விட்ரலாமே!

இதையும் படிங்க: அதெல்லாம் விஜய்க்குத்தான் செட்டாகும்! அஜித்தை வைத்து புது முயற்சி எடுக்கப் போகும் ஆதிக் - பாக்க முடியுமா?

Next Story