எனக்கு இனி வேணாம்… ஈகோலாம் இல்லை… லாரன்ஸை மாற்றிய விஜய் வார்த்தை!
தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக தனது எண்ட்ரியை கொடுத்த லாரன்ஸ் பின்னர் நடிகராக மாறினார். தொடர்ச்சியாக அவரின் படங்கள் மினிமம் கியாரண்டி வசூல் கிடைத்தது. தற்போது ரஜினியின் மாஸ் ஹிட் படமான சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
தொடர்ச்சியாக சமூகத்தில் கஷ்டப்படும் குழந்தைகளுக்கும், மாற்று திறனாளிகளுக்கும் தொண்டு நிறுவனம் வைத்து உதவி செய்து வருகிறார். தன்னுடைய படங்களில் அந்த குழந்தைகளுக்கும் சின்ன கதாபாத்திரம் கொடுப்பதையும் வழக்கமாக வைத்து இருக்கிறார். ஆனால் நேற்று அவரிடம் இருந்து ஒரு வீடியோ வெளியாகியது. என் தொண்டு நிறுவனத்துக்கு இனி யாரும் பணம் அனுப்ப வேண்டாம்.
இதையும் படிங்க : சென்னையில் ஜவான் பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி!.. அட நம்ம தளபதி என்ட்ரியும் கன்ஃபார்ம்!.. குட்டி கதை?..
இதை பணம் இருக்கிற அகங்காரத்தில் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம் என்றும் இப்போது நான் வருடத்திற்கு மூன்று படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதால் அதன் மூலம் வரும் பணத்தில் என்னுடைய டிரஸ்டை பார்த்துக் கொள்கிறேன் என்றும் ஓபனாக பேசி இருந்தார். இதுகுறித்து விசாரிக்கும் போது, வருடா வருடம் ஒரு படம் செய்து அதில் வரும் பணத்தில் தான் தொண்டு நிறுவனம் மூலம் குழந்தைகளுக்கு உதவி செய்து வந்து இருக்கிறார். ஆனால் தற்போது இந்த முடிவினை மாற்றி இருக்கிறார். இதற்கு நடிகர் விஜய் தான் காரணம் என கூறப்படுகிறது.
படம் நடித்து அதில் நல்ல விஷயம் செய்கிறீர்கள். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். ஒரு வருடத்துக்கு ஒரு படம் வேணாம் இனி மூன்று படங்கள் செய்யுங்கள். அந்த பணத்தில் இருந்து உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள் என அறிவுரை கூறினாராம். இதை தொடர்ந்து லாரன்ஸும் இனி தொடர்ச்சியாக படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தும் முடிவில் இருக்கிறார்.
இதையும் படிங்க : காருக்குள்ளேயே கதற கதற!.. டிரைவருடன் சீரியல் நடிகை பண்ண வேலை!.. ஈசிஆரில் சம்பவம்!..
இதனால் தான் தன்னுடைய தொண்டு நிறுவனத்துக்கு பணம் வேணாம் என ஓபன் ஸ்டேட்மெண்ட் விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. எனக்கு எதற்கு பணம். ஒரு மகள் தான் இருக்கிறார். அவருக்காக கொஞ்சமாக சொத்து சேர்த்து திருமணம் செய்தால் போதும். மேலும், ஈசிஆரில் கட்டப்பட்டு வரும் ராகவேந்திரா கோயிலில் நானும், மனைவியும் கடைசி வாழ்க்கையில் தொண்டு செய்து வாழ்ந்து விடுவோம் என்றே தன்னுடைய நெருங்கிய சகாக்களிடம் தொடர்ச்சியாக பேசி வருகிறார்.
சந்திரமுகி 2 படத்திற்கு அவருக்கு 27 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படம் மேலும் வெற்றியடையும் சமயத்தில் அவரின் சம்பளம் இன்னமும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.