Connect with us
raghuvaran

Cinema News

விஜயை பற்றி சரியாக கணித்த ரகுவரன்! ஒரு தீர்க்கதரிசிதான்.. என்ன சொன்னார் தெரியுமா?

Vijay Raghuvaran: தற்போது விஜயின் மாஸ் என்ன என்பது திரை உலகினர் அனைவருக்கும் ஒரு பெரிய ஆச்சரியத்தை வரவழைத்திருக்கும். ஏனெனில் ஆரம்ப காலங்களில் அவர் ஹீரோவாக நடித்து பல படங்கள் தோல்வியையே தழுவி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஹீரோ மெட்டீரியல் இல்லை என விஜயை பற்றி பல விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன .

அதையெல்லாம் தன் மனதில் பதித்துக் கொண்டு தன்னுடைய கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் தன்னை தூற்றியவர்கள் முன் இப்பொழுது ஒரு பெரிய அந்தஸ்து உள்ள நடிகராக மாறி இருக்கிறார் விஜய். ரஜினி கமல் இவர்களுக்கு அடுத்தபடியாக விஜய் தான் மாஸ் காட்டி வருகிறார். இந்த நிலையில் அவருடைய அடுத்த கட்ட பயணமாக அரசியல் அமைய இருக்கிறது.

இதையும் படிங்க: ரஜினி பட பாட்டை ஆட்டைய போட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!.. எஸ்.கே 23 பட தலைப்பு இதுதானாம்!..

அதற்கான முன்னேற்பாடுகளை தனது தொண்டர்கள் மூலம் கவனித்து வருகிறார் விஜய். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களம் இறங்குகிறார். இப்படி சினிமாவிலும் ஒரு பெரிய சாதனை படைத்த நடிகராக மாறியது மட்டுமல்லாமல் அரசியலிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த போகிறார் விஜய். இந்த நிலையில் விஜயின் வளர்ச்சியை அப்பவே கணித்திருக்கிறார் நடிகர் ரகுவரன்.

இதைப்பற்றி பகவதி பட இயக்குனர் வெங்கடேஷ் ஒரு பத்திரிக்கையில் கூறியது என்னவென்றால், ‘ விஜய் சார் ரகுவரன் சார் நடிப்பை மிகவும் ரசிப்பாரு. விஜய் சாருக்கு ஷூட்டிங் முடிந்தாலும் நீங்கள் வீட்டுக்கு போகலாம் என்று சொன்னால் கூட விஜய் சார் போக மாட்டாரு. ரகுவரன் சார் நடிப்பதை பார்த்துவிட்டு போகிறேன் என அவருடைய நடிப்பை தூரத்தில் இருந்து ரசித்து பார்த்துக் கொண்டிருப்பார் விஜய்.

இதையும் படிங்க: செப்டம்பரில் மாநாடு!. 10 லட்சம் பேர் டார்கெட்!.. தளபதி விஜய் போடும் பக்கா ஸ்கெட்ச்!..

அதேபோல் எவ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும் விஜய் அதை சாமர்த்தியமாக பேசக்கூடியவர். அதை ரகுவரன் சார் மிகவும் ரசிப்பார். ஒரு சமயம் விஜயின் நடிப்பை பார்த்து ரகுவரன் சார் என்னிடம்  ‘இந்தப் பையன் கிட்ட ஏதோ இருக்கு இல்ல, என்றைக்காவது ஒரு நாள் இவன் ஒரு பெரிய ஹீரோவாக வருவான்’ அப்படின்னு சொன்னாரு. விஜயின் வளர்ச்சியை அன்றே கணிச்சி இருக்காரு ரகுவரன் சார்’ என வெங்கடேஷ் அந்த பத்திரிக்கையில் குறிப்பிட்டு இருப்பது தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

google news
Continue Reading

More in Cinema News

To Top