Cinema News
திருந்தாத ஜென்மங்கள்?.. பெண்களை இழிவா பேசலாமா விஜய்?.. லியோ டிரெய்லருக்கு குவியும் எதிர்ப்பு!..
நடிகர் விஜய்யின் லியோ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியான நிலையில், கூடவே நெகட்டிவிட்டி ஹாஷ்டேக்குகளும், படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற அந்த கெட்ட வார்த்தைக்கு கடுமையான எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன.
பயங்கர பிரஷரில் பார்த்திபன் பேசும் வசனமாக அது படத்தில் இடம்பெற்றிருந்தாலும், ட்ரெய்லரிலேயே கொண்டு வந்து ஹைப்பை எகிற வைக்கிறேன் என நடிகர் விஜய் தன்னை ரசித்துப் பார்க்கும் குழந்தைகள் மனங்களில் கூட கெட்ட வார்த்தையை விதைக்கிறாரே என ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் அந்த வார்த்தையை குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இதையும் ஃபேக் டிரெய்லர்னு கம்பு சுத்துங்க பார்க்கலாம்!.. ஆபாச வசனம் பேசும் விஜய்.. வெளுத்த ப்ளூ சட்டை!..
ப்ளூ சட்டை மாறனை தொடர்ந்து நடிகர் விஜய்யின் லியோ படத்தின் ட்ரெய்லருக்கு ராஜேஸ்வரி ப்ரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் தான் லியோ படத்தின் பாடலில் மில்லி உள்ள போனா போதும் கில்லி வெளியே வருவான் டா உள்ளிட்ட வரிகள் இடம்பெறக் கூடாது என்றும் புகை மற்றும் போதையை விஜய் ஊக்கப்படுத்துகிறார் என்று புகார் அளித்திருந்தார்.
அவரது புகாரை தொடர்ந்து பாடல் வரிகளில் மாற்றம் இடம்பெற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், லியோ படத்தின் டிரெய்லர் வெளியானதும் உடனடியாக ஆஜரான ராஜேஷ்வரி ப்ரியா தனது கடுமையான கண்டனத்தை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: என்னடா தீபாவளியே வந்த மாதிரி இருக்கு!.. லைஃப் டைம் செட்டில்மெண்ட்!.. லியோ டிரெய்லர் எப்படி இருக்கு?..
”லியோ ட்ரைய்லர் பார்த்தேன். விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா? விஜய் கெட்ட வார்த்தை பயன்படுத்தியுள்ளது(1.46 நிமிடத்தில்)அவரது தரத்தை மிகவும் குறைத்துள்ளது. பெண்களை இழிவு செய்யும் வார்த்தை விஜய்க்கு வசனமா?
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?
@actorvijay
ரசிகர்களை தவறாக வழிநடத்தும் விஜய்க்கு எமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து கொள்கிறேன்.
@Dir_Lokesh
தகுதியில்லாத இயக்குனர்.
திரைப்படத் துறை முன்வந்து இதனை எதிர்க்க வேண்டும்.
@7screenstudio” என கண்டித்துள்ளார். லியோ படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற அந்த ஆபாச வசனம் சென்சாரில் மியூட் செய்யப்பட்டாலும் ஓடிடி உள்ளிட்டவற்றில் இடம்பெற வாய்ப்பு அதிகம் என்பதால் விஜய் அதை தவிர்த்து இருக்க வேண்டும் என ஏராளமான கண்டனங்களும் குவிந்து வருகின்றன.