ரஜினிக்காக ராகவா லாரன்ஸ் இறங்கி செய்த வேலை!… என்னய்யா அம்புட்டு பாசமா?..

by Akhilan |   ( Updated:2023-09-07 03:34:14  )
ரஜினிக்காக ராகவா லாரன்ஸ் இறங்கி செய்த வேலை!… என்னய்யா அம்புட்டு பாசமா?..
X

Rajini Raghava: நடிகர் ராகவா லாரன்ஸுக்கு ரஜினிகாந்த் மீது கொள்ளை பிரியம் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால் அவருக்கு இப்படி இறங்கி ஒருவேலை செய்வார் என்பதை பலரும் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். பலரை வாயில் கை வைக்கும் விஷயத்தினை அசராமல் செய்து இருக்கிறார்.

கஷ்டத்தில் இருந்த லாரன்ஸை நடன இயக்குனர் பிரபுதேவாவிடம் சேர்த்து விட்டவர் ரஜினிகாந்த். அதனால் தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக்கொடுத்த ரஜினியின் மீது அத்தனை பிரியமாக ராகவா லாரன்ஸ் இருந்து வருகிறார். ரஜினியை பார்க்க, பேச எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் பேசக்கூடிய 6 பேரில் லாரன்ஸும் ஒருவர்.

இதையும் படிங்க: குருநாதர் ஷங்கரையே இட்லியா தூக்கி சாப்பிட்ட அட்லீ!.. தமிழ் சினிமா இயக்குனர்களிலேயே இப்போ இவர் தான் டாப்!

எப்பையுமே இரண்டாம் பாகத்தில் இன்னொருவரை ரீப்ளேஸ் செய்ய லாரன்ஸ் விரும்ப மாட்டார். ஆனால் ரஜினியின் மீது இருந்த பாசத்தால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ஓகே சொல்லினார். அந்த படத்தினை பி.வாசுவே இயக்கி இருக்கிறார். இந்த தகவலை முதலில் ரஜினியிடம் சொன்ன போது ஒன்லைன் மட்டும் கேட்டாராம்.

தைரியமாக பண்ணுமா என தைரியம் கொடுத்து இருக்கிறார். அதை தொடர்ந்து அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் முன்னரே வாசு, லாரன்ஸை கூப்பிட்டு உங்க கதாபாத்திரத்தில் ரஜினி வந்துவிடவே கூடாது எனச் சொல்லினாராம். அதை மனதில் கட்டுப்படுத்தி நடத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க: பாலிவுட்டில் பலித்ததா அட்லியின் காப்பி மேஜிக்!.. ஷாருக்கானின் ஜவான் படம் எப்படி இருக்கு?..

வேட்டையன் மேக்கப் போட்டு நின்ன போது அவருக்கு உதறல் எடுக்க நேரடியாக ரஜினிக்கு கால் செய்து பயமாக இருப்பதாக சொன்னாராம். அவர் ரொம்ப ஓவரா செய்திடாத, கம்மியாவும் பண்ணிடாத எனக் கூறி இருக்கிறார். அதை தொடர்ந்தே சந்திரமுகி 2 படப்பிடிப்புகள் முடிந்து இருக்கிறது.

இந்நிலையில் தன்னுடைய பிரஸ் மீட்டில் பேசிய லாரன்ஸ் என்னுடைய அம்பத்தூர் அருகில் இருக்கும் ராகவேந்திரா சிலையை ரஜினியை மனதில் வைத்து அவரின் உருவில் உருவாக்கி இருக்கிறாராம். தன்னுடைய குருமார் எப்பையுமே ரஜினி தான் என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story