ரஜினி 171ல் கேமியோ ரோலில் ‘டான்’ நடிகர்? ரெண்டு பாட்ஷாக்களும் சேர்ந்தா எப்படி இருக்கும்?
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் தன்னுடைய 169 வது படத்தில் நடித்து வருகிறார். ஜெய்லர் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்புகள் முக்கால் வாசி முடிந்த நிலையில் அடுத்ததாக லால் சலாம் படத்திலும் கேமியோ ரோலில் நடித்து வருகிறார்.
வயதானாலும் இன்னும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் நடிகராகவே இருந்து வருகிறார். இதனை அடுத்து ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் இணைகிறார் ரஜினி. அந்தப் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.
ஏனெனில் சமூகத்தில் மூடிக் கிடக்கும் பிரச்சினைகளை குடைந்து தூசி தட்டி அதை படமாக கொடுப்பவர் ஞானவேல். அவர் ரஜினியை வைத்து எந்த மாதிரியான கதையை பண்ணப் போகிறார் என்று அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் இந்தப் படத்திற்கு பிறகு ரஜினி லோகேஷுடன் இணைந்து ஒரு படம் பண்ணப் போகிறார் என்று தகவல்கள் வெளியானது. ஓரளவிற்கு அந்த செய்தி உண்மைதான். கிட்டத்தட்ட லோகேஷுடன் இணைந்து பணியாற்றும் அந்தப் படம் தான் ரஜினிக்கு கடைசியாக படமாகவும் அமையும் என்றும் கூறிவருகின்றனர்.
அதே சமயம் கமலுக்கு எப்படி ஒரு மாபெரும் ஹிட் கொடுத்தாரோ அதே போல எனக்கும் அந்த மாதிரி ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரஜினி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு பாட்ஷாவிற்கு பிறகு மாஸான படம் இதுவரை ரஜினிக்கு வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.அதனால் அந்த ஆசையை லோகேஷை வைத்து நிறைவேற்ற இருக்கிறார் ரஜினி.
மேலும் அந்தப் படத்தில் கேமியோ ரோலில் கேஜிஎஃப் நடிகர் யாஷை நடிக்க வைக்க ரஜினி லோகேஷிடம் பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே ரஜினியின் தீவிர வெறியனான யஷ் கண்டிப்பாக இதற்கு சம்மதம் தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் லோகேஷுடன் இணைந்து யஷும் படம் பண்ண வேண்டும் என்ற ஆசையில் இருப்பதாகவும் தெரிகிறது. அவர் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகமே லோகேஷை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
இதையும் படிங்க : சிம்பு-ஐசரி கணேஷ் உச்சக்கட்ட மோதலில் நடந்த பின்னனி சம்பவம்! முதல்ல கட்டைய போட்டது யாருனு தெரியுமா?