ரஜினியின் வார்த்தையை மீறி ஸ்ரீதேவி செய்த காரியம்…? விஜய்க்கு கிடைத்த லக்கி சான்ஸ்…

by Arun Prasad |
ரஜினியின் வார்த்தையை மீறி ஸ்ரீதேவி செய்த காரியம்…? விஜய்க்கு கிடைத்த லக்கி சான்ஸ்…
X

சிறுவயது கதாப்பாத்திரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்ரீதேவி “16 வயதினிலே” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக மக்கள் மனதில் ஜொலித்தார். அதன் பின் ரஜினி, கமல் ஆகியோர் நடித்த பல திரைப்படங்களில் ஸ்ரீதேவி நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்தியாவின் டாப் ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் பெற்றார்.

இவ்வாறு இந்தியாவின் கனவுக்கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவி, கடந்த 1991 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்கு ஜான்வி மற்றும் குஷி ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். இதில் ஜான்வி கபூர் ஹிந்தியில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

1980களில் டாப் நடிகையாக திக்ழந்துவந்த ஸ்ரீதேவி, அதன் பின் திரைப்படங்களில் நடிப்பதையே நிறுத்திக்கொண்டார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அவரை பலமுறை தங்களது திரைப்படங்களில் நடிப்பதற்காக அழைத்தும் ஸ்ரீதேவி மறுத்துவிட்டார்.

இதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் சிம்பு தேவனின் “புலி” திரைப்படம் உருவான போது, இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் பி டி செல்வக்குமார் ஸ்ரீதேவியை எப்படியாவது இதில் நடிக்கவைக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார். இதனை கூறியபோது விஜய் உட்பட அனைவரும் “இது நடக்காத காரியம்” என கூறியிருக்கிறார்கள்.

ஆனால் தயாரிப்பாளர் பி டி செல்வக்குமார், “நான் எப்படியாவது ஸ்ரீதேவியை நடிக்க வைத்துவிடுவேன்” என கூறியிருக்கிறார். அதன் பின் அவர் ஸ்ரீதேவியை பார்க்கச் சென்றிருக்கிறார். அப்போது அவர் ஸ்ரீதேவியிடம் “நீங்கள் நடித்த 16 வயதினிலே திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அத்திரைப்படத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். நான் உங்களது தீவிர ரசிகன்” என கூறியிருக்கிறார்.

மேலும் தான் தயாரிக்கும் “புலி” திரைப்படத்தில் நடித்துக்கொடுக்குமாறு ஒரு வேண்டுகோளையும் விடுத்திருக்கிறார். முதலிலேயே செல்வக்குமார் “நான் உங்களது ரசிகன்” என்று சொன்னது ஸ்ரீதேவியை கவர்ந்துவிட்டது. ஆதலால் “புலி” திரைப்படத்தில் நடிக்க ஸ்ரீதேவி ஒத்துக்கொண்டாராம்.

மேலும் ஸ்ரீதேவி “ரஜினிகாந்த் எனது வீட்டிற்கு வந்து அவரது திரைப்படத்தில் நடிக்கவேண்டும் என கூறினார். நான் மறுத்துவிட்டேன். ரஜினிகாந்த் பலமுறை என்னிடம் அவரது திரைப்படங்களில் நடிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் நான் ஒத்துக்கொள்ளவே இல்லை. அதற்கு ரஜினிகாந்த் ஒரு வேளை நடிப்பதற்கு விருப்பம் இருந்தால் நீங்கள் எனது திரைப்படத்தில் தான் நடிக்கவேண்டும் என கண்டிஷன் போட்டுவிட்டுதான் போனார். ஆனால் தற்போது விஜய் திரைப்படத்தில் நான் நடிப்பது அவருக்கு தெரிந்தால் என்னை அவர் நிச்சயமாக திட்டுவார்” என கூறியிருக்கிறார். இச்சம்பவத்தை தயாரிப்பாளர் செல்வக்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

எனினும் பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த “புலி” திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் வணிக ரீதியாக தோல்வி அடைந்ததுதான் பெரும் சோகங்களில் ஒன்று.

Next Story