இப்படி ஒரு டார்ச்சரா? வேறு வழியில்லாமல் மாட்டிக்கிட்டு முழிக்கும் ரஜினி.. தலைவரு பாவம்தான்

by Rohini |   ( Updated:2024-04-10 09:18:32  )
rajini
X

rajini

Actor Rajinikanth: தமிழ் சினிமாவில் ஒரு தன்னிகரற்ற நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமா வாழ்க்கையில் மட்டுமே பல சாதனைகளை புரிந்து இன்று சமூகத்தில் ஒரு மதிக்கத்தக்க நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் நிஜவாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறாரா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இது குறித்து பல்வேறு தகவல்களை பிரபல மூத்த பத்திரிக்கையாளரான சபீதா கூறியிருக்கிறார்.

சில தினங்களாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இவர்களின் விவாகரத்து விஷயம் சூடுபிடித்திருக்கிறது. தங்களது திருமணம் செல்லாது என அறிவித்து விவாகரத்து வழங்க வேண்டும் என இருவருமே மனுதாக்கல் செய்திருப்பது சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாறி மாறி இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்து சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: விஜயகாந்த் இல்லாமலும் ஹிட்டு கொடுப்பேன்!.. சரித்திர சாதனையை நிகழ்த்திய இணைந்த கைகள்!..

இவர்களுக்கிடையில் மாட்டிக்கிட்டு முழிப்பது அவர்களின் மகன்கள்தான். மகன்களை பொருத்தவரைக்கும் தங்கள் பெற்றோர் சேர்ந்து வாழவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள். இதனால் ரஜினியே ஐஸ்வர்யாவிடம் பல முறை பேசியிருக்கிறாராம். இப்படி ஒரு பக்கம் சொந்த வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சினைகளை வைத்துக் கொண்டு ரஜினி எப்படி நிம்மதியாக இருப்பார் என்று நிருபர் சபீதாவிடம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த சபீதா இந்த பிரச்சினையால்தான் அடிக்கடி ரஜினி இமயமலை சென்று விடுகிறார். அவருக்கும் ஆரம்பகாலங்களில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தது. தற்கொலை செய்யவும் முயன்றார். லதாவை விவாகரத்து செய்யவும் முற்பட்டார். அந்த நேரத்தில் ரஜினிக்கு ஒரு ஆதரவுக் கைகளாக இருந்தது இயக்குனர் எஸ்.பி. முத்துராமனும் பாலசந்தரும்தான் என சபீதா கூறினார்.

இதையும் படிங்க: வாரிசு நடிகையுடன் ஜல்சா செய்த தனுஷ்… விவகாரத்து பிறகு உடனே திருமணம்… உண்மையை உடைத்த பிரபலம்!

இவர்கள்தான் ரஜினியையும் லதாவையும் அழைத்து பேசி சமாதானப்படுத்தினார்கள். அதுபோக இன்றளவும் ரஜினி நடித்துக் கொண்டிருக்கிறார். 73 வயதை எட்டியவுடன் அனைவருக்கும் தோன்றுவது ஓய்வு எடுக்க வேண்டும் என்றுதான். இதே ஆசை ரஜினிக்கும் இருக்கிறதாம். ஆனால் லதாவின் வற்புறுத்தலின் பேரில்தான் ரஜினி நடித்துக் கொண்டிருக்கிறாராம். பணத்தின் மீது பேராசை பிடித்தவராம் லதா.

Next Story