More
Categories: Cinema News latest news

அட தொட்டதுக்கெல்லாம் சினுங்குவாரு போல – கமல், ஸ்ரீதேவி போஸ்டரை பார்த்து விரக்தியில் ரஜினி எடுத்த முடிவு!

Actor Rajini vs Kamal : கர்நாடகாவில் இருந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வந்தவர்தான் ரஜினி. ஒரு பஸ் நடத்துனராக இருந்து ஒரு வேளை சாப்பாட்டுக் கூட கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் சினிமாவின் மோகம் பார்த்துக் கொண்டிருந்த அரசு வேலையையும் உதறி தள்ளி சென்னைக்கு வரவழைத்தது.

சென்னையில் ஒரு நடிப்பு பயிற்சி பள்ளியில் சேர்ந்து நடிப்பை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார் ரஜினி.  இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் போதே கமல் ஒரு நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: நோக்கம் வெவ்வேறாக இருந்தாலும் முடிவு ஒன்னுதான்! அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு வழிவிட்ட விஜய், அஜித்

இருந்தாலும் ஹீரோவாக முடியாவிட்டாலும் ஒரு சாதாரண கதாபாத்திரம் கிடைச்சால் கூட விடக்கூடாது என்ற முடிவில் தான் இருந்தார் ரஜினி. அந்த நடிப்பு பயிற்சி பள்ளிக்கு அருகில் தான் உட்லாண்ட்ஸ் ஹோட்டல் இருந்ததாம்.

தினமும் காலை அந்த ஹோட்டலுக்குத்தான் இட்லி, தோசை சாப்பிடப் போவாராம் ரஜினி. அப்படி ஒரு சமயம் போகும் போது கமல் மற்றும் ஸ்ரீதேவி நடித்த ‘தங்கத்திலே வைரம்’ படத்தின் போஸ்டர் ஒன்றை மெதுவாக ஏற்றிக் கொண்டிருந்தார்களாம்.

இதையும் படிங்க: நீங்க மட்டும் பாலிவுட் போலாம்… அவரு போக கூடாதா? ஜவானில் அட்லீ செய்த தில்லாலங்கடி!

அதை பார்த்ததும் ‘ச்ச.. நமக்கு எப்பொழுது இந்த மாதிரியெல்லாம் நடக்கும்’ என்று முணுமுணுத்துக் கொண்டே ஹோட்டலில் சாப்பிடப் போனாராம். இருந்தாலும் அந்த போஸ்டரை பார்த்ததில் இருந்து ஒரு வித மனச்சோர்வு ரஜினியை பற்றி கொண்டதாம்.

ஒரு வேளை இந்த சினிமா நமக்கு வாய்ப்பு கொடுக்கவில்லையென்றால் பார்த்த கண்டக்டர் வேலையையும் விட்டுவிட்டோம். நம்முடைய எதிர்காலம் என்னவாகும் என்று யோசித்துக் கொண்டே சென்றாராம்.

இதையும் படிங்க: செஞ்சி வச்ச சில போல நிக்குறியே!.. அன் லிமிட்டேட் அழகை தாரளமா காட்டும் கீர்த்தி சுரேஷ்…

அந்தக் காலத்தில் நடிப்பு பயிற்சி பள்ளியில் ஒரு ஆசிரியை இருந்தாராம். அவரிடம் சென்று தன் நிலையை எடுத்துச் சொல்லி புலம்பினாராம் ரஜினி. அதுமட்டுமில்லாமல் நான் பெங்களூருக்கே சென்று விடுகிறேன் என்று பயந்து அழுது  கூறினாராம். அதற்கு அந்த ஆசிரியை ‘உன்னிடம் நிறைய திறமை இருக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்ள தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறாய்’ என்று கூறினாராம்.

மேலும்  ‘எதிர்காலத்தை பற்றி ஒரு நிமிடம் கூட யோச்சிக்காதே. உன்னிடம் இருக்கும் மிகப் பெரிய திறமை அந்த ஆண்டவன் உனக்கு கொடுத்தது. அதை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்த ஆண்டவனுக்கு தெரியும். இந்த சினிமா உலகில் நீ ஒரு மிகச்சிறந்த நடிகனாக வருவாய். அதனால் கொஞ்சம் பொறுத்திரு’ என கூறினாராம்.

அன்று அந்த ஆசிரியை சொன்னதை தட்டாமல் கேட்டுக் கொண்ட ரஜினி பின்னாளில் எப்படி பட்ட ஒரு ஆகச்சிறந்த நடிகராக மாறினார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

Published by
Rohini

Recent Posts