Cinema News
வீட்டுக்கு வந்த பிரபலத்தின் காலை அளவெடுத்த ரஜினி.. மனுஷன் இப்படியெல்லாம் யோசிப்பாரா?!..
Actor Rajini: ஒவ்வொரு மனிதருக்குள்ளும் யாருக்கும் தெரியாத ஒரு மனசு இருக்கும். என்னதான் கெட்டவனாகவே இருந்தாலும் அவனுக்குள்ளும் ஒரு நல்ல குணம் என்பது இருக்கத்தான் செய்யும். அதே போல் ஒருவனை ரொம்ப நல்லவனாக நினைக்க அவர் உள்ளுக்குள் வக்கிரமம் பிடித்தவனாக இருப்பான்.
இப்படி யாரையும் உருவம் கண்டு எடைப் போட்டு விடக்கூடாது. இது உலக நியதி. இந்த நிலையில் ரஜினி செய்த ஒரு செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. ரஜினிக்காக அவர் நடிக்கும் படங்களில் ஒரு அறிமுக பாடல் இருக்கும்.
இதையும் படிங்க: தயாரிப்பாளர் தப்பால் வாழ்க்கையில் இணைந்த ஜோடி..! என்.எஸ்.கிருஷ்ணன் – மதுரம் காதல் கதையில் நடந்த ட்விஸ்ட்.!
அந்தப் பாடல் மிகவும் கருத்துள்ள பாடலாகவே அமைந்திருக்கும். அதுமட்டுமில்லாமல் அந்த பாடல் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார் என்பதையும் அந்தப் பாடல் மூலம் தெளிவு படுத்தியிருப்பார். அப்படி ஒரு பாடல்தான் படையப்பா படத்தில் அமைந்த சிங்க நடை போட்டு என்ற பாடல்.
அந்தப் பாடலில் ஒரு வரி. ‘பாசமுள்ள மனிதனப்பா.. மீசை வச்ச குழந்தையப்பா’ என்ற வரி இருக்கும். அந்த வரியை நிஜத்தில் உண்மையாக்கியிருக்கிறார் ரஜினி. பாபா படத்திற்கு ஒரு பாடலுக்காக வைரமுத்துவை தன் வீட்டிற்கு அழைத்தாராம் ரஜினி.
இதையும் படிங்க: ஆள பாத்து எட போடாதீங்க ஏஜிஎஸ்! வளர்த்து விட்டவரிடமே வேலையை காட்டிய பிரதீப் ரெங்கநாதன்
அப்போது வைரமுத்து எப்போதும் போல அவர் வீட்டிற்கு சென்று அமர்ந்திருக்கிறார். ஆனால் ரஜினி வைரமுத்துவின் உடை, அவர் அணிந்திருந்த செருப்பு இவற்றையே பார்த்துக் கொண்டிருந்தாராம். உடைக்கும் செருப்புக்கும் சம்பந்தமே இல்லையே எனக் கூறிவிட்டு தன் உதவியாளரை அழைத்து பேப்பரை எடுத்து வர சொன்னாராம்.
அந்த உதவியாளரை வைத்து அந்த பேப்பரில் வைரமுத்துவின் காலை அளவெடுத்து வைத்துக் கொண்டாராம். உங்களுக்கு ஒரு புதிய செருப்பை வாங்கி அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு வைரமுத்துவை அனுப்பி விட்டாராம். ரஹ்மான் ஸ்டூடியோவிற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தால் வைரமுத்துவின் வீட்டில் ரஜினி சொன்ன மாதிரி புதிய செருப்புகள் இருந்ததாம். எந்தளவுக்கு பாசமுள்ள மனிதராக இருக்கிறார் ரஜினி என ஒரு பேட்டியில் வைரமுத்து சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: அட என்னங்க இப்படி..! பாய்ஸ் மணிகண்டன் இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?