Cinema News
விஜய்க்கு எதிரா மறைமுகமா கேம் ஆடும் ரஜினி… இதெல்லாம் அவருடைய ஸ்ட்ரேஜிதானா?
சமீப காலமாகவே ரஜினி அரசியலை விட்டு கொஞ்சம் விலகி இருந்தார். ஆனால் சீமான் சந்திப்புக்கு பிறகு அவருடைய பெயர் இப்போது அடிபட்டுக் கொண்டே வருகின்றது. இதற்கு பின்னணியில் ஏதாவது காரணம் இருக்குமா என்ற வகையில் வலை பேச்சு அந்தணனிடம் கேட்டபோது அதற்கு அந்தணன் பல தகவல்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் .
அதாவது அரசியல் பின்னணி இல்லாமல் ஒரு பெரிய நடிகரின் படம் மக்களிடம் ரீச் ஆவது என்பது கஷ்டமாக இருக்கிறது. நான் கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்று அவர் சொல்லும்போது இருந்த மாஸ் நான் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று சொல்லும் போது அது அப்படியே குறைந்தது. இன்னொரு விஷயம் என்னவெனில் ஏதாவது ஒரு அரசியல் வகையில் நீங்கள் தொடர்பில் இருந்தால்தான் உங்களுக்கு மரியாதை என்ற சூழ்நிலை இங்கு வருகிறது.
இதையும் படிங்க: ஏழு வருஷம் வீட்டுக்கு போகல..யாருக்கும் அந்த கெட்ட பழக்கம் இல்ல.. ராம்கியின் பிளாஷ்பேக்
அது மட்டுமல்ல அவருக்கு பிடிக்காத ஒருவர் இன்று அரசியலில் வேகமாக வந்து கொண்டிருக்கிறார். அவர் பெயரை வெளிப்படையாகவே சொல்கிறேன் விஜய் தான். அண்மைக்காலமாக விஜயின் எல்லா நடவடிக்கைகளும் ரஜினியை எரிச்சல் ஊட்டும் வகையில் தான் அமைந்திருக்கின்றன .இந்த சூழ்நிலையில் ரஜினிக்கு என ஒரு ஸ்ட்ராட்டஜி எப்போதுமே உண்டு.
இத்தனை வருடங்களாக அவர் நம்பர் ஒன் இடத்திலேயே இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவருடைய ஸ்ட்ராட்டஜி தான். அந்த ஸ்ட்ராட்டஜி இல்லாமல் இப்படி ஒரு புகழை அடையவே முடியாது. இப்படி இருக்கும் நிலையில் ஏன் நாம் மறைமுகமா ஒரு அரசியலை பண்ண கூடாது? என ரஜினி யோசித்திருப்பார். வெளிப்படையாக அரசியலுக்கு வரவில்லை என தெளிவாக சொன்னாலும் அதன் பிறகு வந்தாலும் சிரிக்கும் விஷயமாகத்தான் மக்கள் மத்தியில் பார்க்கப்படும்.
இதையும் படிங்க: அந்த மேக்கப் கிட் 2 லட்சம் இருக்கும்.. ஃப்ரீயா கொடுத்த கமல்! யாருக்கு தெரியுமா?
ஆனால் மறைமுகமா ஒரு விஷயத்தை பண்ணனும் என நினைக்கிறார். அப்படி ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த மாதிரி பேசுவதற்கு என ஒரு கூட்டம் இருக்கிறது. இதற்கு ஒரு சரியான கருவியாக அமைந்தது தான் இந்த சீமான் ரஜினி சந்திப்பு. ரஜினியை பொறுத்தவரைக்கும் சேனலில் எப்போதும் லைம் லைட்டில் இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார். இப்போது அதை தொடர வேண்டும் என நினைக்கிறார் என்று அந்தணன் கூறியிருக்கிறார்.