ரஜினி, கமல் சேர்ந்து இத்தனை படம் ஒன்னா நடிச்சிருக்காங்களா?!… இதுல இவ்வளவு ஹிட்டு படங்களா?..!

Published on: November 7, 2024
kamal rajini
---Advertisement---

Rajini Kamal: கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ள நிலையில் ஹிட்டான படங்களின் லிஸ்ட்டை இதில் பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அதைப் போல் உலகநாயகன் என்று அழைக்கப்படுபவர் கமல்ஹாசன். இன்றைய கோலிவுட்டில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக வளம் வருகிறார்கள். டாப் நடிகர்களாக விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கு சரிசமமாக ஹிட் திரைப்படங்களை கொடுத்து அசத்தி வருகிறார்கள்.

இவர்கள் இருவருக்குமே வெவ்வேறு பாதை இருக்கின்றது. தாங்கள் தேர்ந்தெடுக்கும் கதைகளில் இருந்து நடிக்கும் ஸ்டைல் வரை இருவரின் பாதையும் வேறு. நடிகர் ரஜினிகாந்த் முழுக்க முழுக்க கமர்சியல் திரைப்படங்களை கொடுப்பவர் அதேபோல கமல்ஹாசன் அவர்கள் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து அதில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்.

இதையும் படிங்க: ரஜினி அப்படிக் கூப்பிட்டதும் பேச்சே வரல… வேட்டையன் நடிகரோட குஷிக்கு அளவே இல்ல..!

சினிமாவில் புதிதான தொழில்நுட்பகளை அறிமுகம் செய்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கக் கூடியவர் கமல்ஹாசன். ஆனால் ஒரு காலத்தில் இவர்கள் இருவருமே ஒன்றாக பயணித்தவர்கள். சொல்லப்போனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா வாழ்க்கை தொடங்கிய சமயத்தில் கமல்ஹாசன் உச்ச நடிகராக இருந்திருக்கின்றார்.

80-களில் இருவருமே வளர்ந்து வரும் ஹீரோக்களாக மாறினார்கள். இருவருக்குமே அதிக ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. ரஜினியும் கமலும் சேர்ந்து இதுவரை 13 திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவள் அப்படித்தான், 16 வயதினிலே, அவர்கள், ஆடு புலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது, அலாவுதீனும் அற்புத விளக்கும், நட்சத்திரம், துல்லுமுல்லு போன்ற பல படங்கள் இவர்களது நடிப்பில் வெளியாகியிருக்கின்றது.

இதையும் படிங்க: வேட்டையன் படத்தில் ரஜினியின் சம்பளம் இவ்வளவுதானா?!.. நம்பவே முடியலயே!…

இந்த படங்களில் மூன்று முடிச்சு, 16 வயதினிலே, அவள் அப்படித்தான், தப்பு தாளங்கள், அவர்கள், நினைத்தாலே இனிக்கும், அபூர்வ ராகங்கள் போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படங்கள். அதிலும் 16 வயதினிலே என்ற திரைப்படம் எல்லாம் பட்டித்தொட்டி எல்லாம் பிரபலமானது. சப்பானி, பரட்டை என்று இவர்கள் இணைந்து நடித்ததை இன்று வரை யாராலும் மறக்க முடியாது.

இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த 13 திரைப்படங்களில் ஏழு படங்கள் டாப் லிஸ்டில் இருக்கின்றன. ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து அவரவர் பாதைகளில் தனித்தனியாக பயணித்து தற்போது மிகப்பெரிய ஜாம்பவன்களாக இருந்து வருகிறார்கள். இன்றும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க மாட்டார்களா? என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதற்கான கதை சரியாக அமைந்தால் நடிப்போம் என்று இருவரும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.