Rajinikanth: பொதுவாக கோலிவுட்டின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி நெகட்டிவாக சொல்வதை பலரும் விரும்பமாட்டார்கள். ஆனால் மேடையில் எப்போதும் ஓபனாக பேசும் ஆர்.வி.உதயகுமார் ரஜினியால் தனக்கு நஷ்டம் என்பதை சொல்லி இருப்பது பலருக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
கோலிவுட்டில் 1988ம் ஆண்டு வெளிவந்த உரிமை கீதம் என்ற படத்தினை இயக்கியவர் ஆர்.வி உதயகுமார். அப்படம் சுமார் வெற்றியை பெற்றாலும் தொடர்ந்து புதிய வானம், கிழக்கு வால் உள்ளிட்ட பட வாய்ப்புகள் அவரினை தேடி வந்தது. இதில் அவர் இயக்கி விஜயகாந்த் நடிப்பில் சின்னகவுண்டர் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: சீரியலில் இழுத்து மூடி நடிக்கும் ரேஷ்மாவா இது?!.. சும்மா திறந்து காட்டி மூடு ஏத்துறாரே!..
அந்த வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் எஜமான், கமல் நடிப்பில் சிங்காரவேலன் போன்ற சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். தொடர்ந்து நிறைய படங்களை இயக்கிவந்த உதயகுமார் கடந்த 2011ம் ஆண்டு தெலுங்கில் மிஸ்டர் ராஸ்கல் என்ற படத்தை கடைசியாக இயக்கி இருந்தார்.
சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் தொடர்ச்சியாக சினிமா விழாக்களில் பங்கேற்று வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் கலந்துக்கொண்டு சாமானியன் ஆடியோ விழாவில் பேசிய போது, தமிழ் சினிமாவில் கமலும், ரஜினியை விட எதார்த்தமான நடிகர் ராமராஜன் தான். எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு விடுவார்.
என்னால் ராமராஜனை இயக்க முடியாமல் போனதே என்ற வருத்தம் இருக்கிறது. இயக்கி முடித்த பின்னரே என்னுடைய நண்பர்கள் விநியோகிஸ்தராக என்னை இழுத்து விட்டார்கள். விநியோகிஸ்தராக நான் இருந்த போது வாங்கிய முதல் படமே ரஜினிகாந்தின் தர்மத்தின் தலைவன். அந்த படம் ரிலீஸுக்கே நிறைய நாட்கள் தள்ளிப்போனது. சம்பாரிக்கவே இல்லை. அதற்குள் பெரிய சிக்கலில் சிக்கினேன். ரஜினி படத்தில் எனக்கு நாலறை கோடி நஷ்டம்.
இதையும் படிங்க: ஒருவழியா குடும்ப பிரச்னை எல்லாம் தீர்ந்துச்சு… அடுத்து என்ன இருக்கு… புதுசா கிளப்புவீங்களே!
அப்போ ராமநாராயணன் எனக்கு ஒரு ஐடியா கொடுத்தார். கொஞ்சம் காசு கொடுத்து சின்ன படத்தினை வாங்கிக்கோ என்றார். அந்த படம் தான் கரகாட்டக்காரன். அந்த படம் சில லட்சங்கள் கொடுத்து ஒரு கோடி வரை லாபம் எடுத்தேன் எனவும் தெரிவித்து இருக்கிறார்.
நடிகை திரிஷா…
கங்குவா படம்…
நடிகர் சல்மான்…
Ajithkumar: நடிகர்…
சென்னை வானகரத்தில்…