விஜய் மிஸ் பண்ணத தட்டி தூக்கும் ரஜினி!.. தலைவர் 171-ல் பென்ச் மார்க் கிரியேட் பண்ணும் சூப்பர் ஸ்டார்..

by Rohini |   ( Updated:2023-10-13 00:03:50  )
vijay
X

vijay

Thalaivar171: ரஜினி தற்போது த.ச.ஞானவேல் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திலும் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். பகத் பாசில் , அமிதாப் பச்சன் போன்ற பெரிய நடிகர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள் என்றால் இந்தப் படம் ஏதோ ஒரு வலுவான சமூக கருத்தை மக்களுக்கு சொல்லுகின்ற படமாகத்தான் அமைய போகிறது.

எப்பவும் போல் இருக்கும் ரஜினி படம் மாதிரி இல்லாமல் ஒரு தரமான ஜெய்பீம் படத்தை போன்ற கருத்துள்ள படமாகத்தான் இருக்கப் போகிறது. ஏற்கனவே ஜெய்பீம் படத்தின் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஞானவேல் இந்த ரஜினியின் படத்தின் மூலம் இன்னும் வேறொரு உயரத்திற்கு செல்வார் என்று நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: ஆபாச புகைப்படம் லீக்!.. ரவுடி பேபி சூர்யாவை தூக்கிய போலீஸ்!.. இதுக்கு இல்லயா சார் ஒரு எண்டு!…

அதுமட்டுமில்லாமல் நல்ல கருத்துக்கள் சினிமா மூலம் அதுவும் ரஜினி மாதிரியான ஒரு மூத்த நடிகர் நடிக்கும் படத்தின் மூலம் வெளியாகுமேயானால் அது மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் போது ரஜினிக்கும் அது பெருமையான விஷயமாகத்தான் அமையும்.

ஒரு நல்ல கதையாக இருக்கிறதால்தான் அமிதாப் போன்ற பெரிய நடிகர்கள் இந்தப் படத்திற்குள் வந்திருக்கின்றனர் என கூறிவருகிறார்கள். இன்னொரு பக்கம் ரஜினியின் அடுத்த படமான தலைவர் 171 படத்தை மீதும் பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

இதையும் படிங்க:அவ சரியான திமிரு புடிச்சவ! ஜெயிலுக்குள் போனதும் என்ன நடந்துச்சுனா? – மகாலட்சுமியை பற்றி ரவீந்திரன் கொடுத்த ஷாக்

அதற்கு மேலும் வலுவூட்டும் விதமாக லோகேஷ் நேற்று சொன்ன விஷயம் தான் ஹைலைட்டே. அதாவது ரஜினி 171 படத்தின் கதையை விஜயிடம் சொன்னதாகவும் அதற்கு விஜய் சூப்பரா இருக்குடா. நல்லா பண்ணு என்று சொன்னதாகவும் கூறியிருந்தார்.

அதுதான் இப்போது வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் ரஜினி 171 படத்தின் மூலம் தமிழ் சினிமா ஒரு மிகப்பெரிய சாதனையை செய்ய இருக்கிறது என்றும் கண்டிப்பாக இந்தப் படம் 1000 கோடி வசூலை பெற்றால் ரஜினியால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கும் பெருமை என்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறினார்.

இதையும் படிங்க: விஜய் மட்டுமில்ல!.. பிரசாந்துக்கும் சம்பவம் பண்ண போகும் வெங்கட்பிரபு!.. தளபதி 68 தெறி அப்டேட்…

அதற்கு சன் பிக்சர்ஸ் பக்காவாக ப்ளான் போட வேண்டும் என்றும் ஏற்கனவே லியோ படம் நார்த் பக்கம் சிங்கிள் ஸ்க்ரீனில் வெளியிட இருப்பதால்தான் 1000 கோடி வசூல் என்பது முடியாமல் போனது. ஆனால் ரஜினி படம் மூலம் ஆரம்பத்திலேயே ஓடிடியிடம் 8 வாரத்திற்கு பிறகு தான் வெளியிடுவோம் என்று சொல்லவேண்டும்.

அப்படி செய்தால்தான் நார்த் பக்கம் மல்டிப்ளக்ஸில் ரஜினி 171 படம் எல்லா திரையரங்குகளிலும் வெளியாகி 1000 கோடி வசூலை நிச்சயம் அடையும் என்று கூறினார். இதை மட்டும் சன் பிக்சர்ஸ் செய்தால் தமிழ் சினிமாவில் ஒரு பலமான பென்ச் மார்க்கை ரஜினி உருவாக்கி விடுவார் என்று கூறினார்.

Next Story