Cinema News
கேப்டனை தவிர யாராலும் பண்ண முடியாது! விஜயகாந்துக்காக ரஜினி விட்டுக்கொடுத்த படம்
தமிழ் சினிமாவில் முவேந்தர்களாக அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர். சிவாஜி, ஜெமினி இவர்களை போல் 80களில் ரஜினி , கமலுடன் விஜயகாந்துக்கும் ஏராளமான ரசிகர்கள் உருவாக தொடங்கினார்கள். விஜயகாந்த் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பே ரஜினியும் கமலும் நல்ல உச்சத்தை அடைந்திருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் ரஜினிக்கு போட்டியாகவே விஜயகாந்தை செதுக்க பல பேர் முயற்சித்தார்கள். ஏனெனில் நிறம், உயரம் என இருவரும் ஒன்று போல் இருந்ததனால் ரஜினியை மாதிரி விஜயகாந்தை உருவாக்க எண்ணினார்கள்.
இதையும் படிங்க : பிக் பாஸுக்கு வா வான்னு கூப்டுறாங்க!.. பட் ஐ எம் வெரி பிஸி!.. ஓவர் சீன் போடும் ஓவியா!..
இருந்தாலும் அவர்களுக்குள் இதுவரை எந்தவொரு போட்டி மனப்பான்மை இருந்ததே இல்லை. விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பிறகும் கூட அடிக்கடி ரஜினி விஜயகாந்தை போய் சந்திப்பதும் ரஜினியை விஜயகாந்த் சந்திப்பதும் வழக்கமாகவே இருந்தது.
இருவரும் சேர்ந்து எடுத்த பல புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்தது. இந்த நிலையில் விஜயகாந்த் தன்னுடைய 72 வது பிறந்த நாளை தொண்டர்கள் முன்னாடி கோலாகலமாக கொண்டாடினார்.
விஜயகாந்தை சந்திப்பதற்கு ஏராளமான மக்கள் வந்தனர். மேலும் நாள்தோறும் ஊடகங்களில் விஜயகாந்தை பற்றியும் அவர் செய்த நல்ல காரியங்களை பற்றியும் பல செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் விஜயகாந்தை வைத்து மூன்று படங்களை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை கூறினார்.
இதையும் படிங்க : குடிக்க ஆரம்பிச்சா எக்ஸ்ட்ரீமுக்கு போயிடுவேன்!.. அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு கூப்பிடுவாங்க!.. உறைய வைத்த ஓவியா!..
அதாவது ஹிந்தியில் காளியா என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்து அதில் ரஜினியை நடிக்க வைக்க திட்டமிட்டார்களாம். ஆனால் ரஜினியோ அந்தப் படத்தில் நடிக்க விஜயகாந்த் தான் மிக பொருத்தமாக இருப்பார் என்று கூறியதால் விஜயகாந்தை வைத்து எடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் தான் கூலிக்காரன் என தாணு கூறினார்.