இப்பதான் எனக்கு பணக்காரன் ஃபீலே வந்திருக்கு!.. ஜெயிலர் வெற்றி விழாவில் மனம் திறந்து பேசிய ரஜினி!..
தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேல் திரையுலகில் நடித்து வருபவர் ரஜினிகாந்த். கர்நாடகாவில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்து நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தவர். பாலச்சந்தர் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கி தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார்.
ஒருகட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய ரஜினி சூப்பர்ஸ்டாராகவும் மாறினார். இவரின் படங்கள் வசூலில் சக்கை போடு போட்டது. எனவே, இவரை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்கள் ஆசைப்பட்டனர். பல வருடங்களாகவே தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: பேரதிர்ச்சி: விஜய் ஆண்டனியோட 16 வயசு மகள் தூக்கிட்டு தற்கொலை.. போலீஸார் தீவிர விசாரணை
கடந்த சில வருடங்களில் சில படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஜெயிலர் படம் மூலம் நானே நிரந்தர சூப்பர்ஸ்டார் என ரஜினி மீண்டும் நிரூபித்துவிட்டார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வெற்றியை பெற்று வசூலை வாரி குவித்துவிட்டது. உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் ரூ.700 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் அப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிக்கு விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை பரிசளித்தார். அதேபோல், நெல்சன் மற்றும் அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் கார் பரிசளித்தார். ஜெயிலர் படத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு விருந்து கொடுத்து தங்க காயின் ஒன்றையும் பரிசளித்தார்.
இதையும் படிங்க: ஜெயிலர் படம் ஆவரேஜ்தான்!.. அத தூக்கிட்டு போனது அவர்தான்.. அட சூப்பர்ஸ்டாரே சொல்லிட்டாரே!…
மேலும், இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருந்து கொடுத்து கேடயமும் கொடுக்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய ரஜினி ‘ஜெயிலர் படம் வெற்றி பெற்றதால் கலாநிதிமாறன் எனக்கும் ஒரு கார் கொடுத்தார். அந்த காரில்தான் இந்த விழாவுக்கு வந்தேன். இந்த காரில் வந்த போதுதான் பணக்காரன் ஆகிவிட்ட உணர்வு வந்தது. உண்மையாகவே சொல்கிறேன். எனக்கு அப்படித்தான் தோன்றியது.
இந்த படத்தின் வெற்றிக்கு பின்னால் பலரும் இருக்கிறார்கள். இயக்குனர் நெல்சன், அனிருத், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என எல்லோரும் சிறப்பாக வேலை செய்தனர். இப்படத்தில் பணிபுரிந்த எல்லாருக்கும் நன்றி’ என ரஜினி பேசினார்.
இதையும் படிங்க: இனிமே என் ஸ்டைலே வேற… சம்பளம் வாங்காமல் பாலசந்தருக்காக ரஜினி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்!