படத்தின் பிரிவ்யூ ஷோவுக்காக கலைஞரை காக்க வைத்த ரஜினி!.. அவர் சொன்ன காரணம் இதுதான்!..

by Rohini |   ( Updated:2024-01-07 07:16:34  )
rajini
X

rajini

Actor Rajini: தமிழ் சினிமாவின் ஒரு பெரிய உச்ச நட்சத்திரம் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதை கடந்தாலும் இன்னும் அதே புத்துணர்ச்சியுடன் அதே உத்வேகத்துடன் ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். எத்தனையோ இளம் தலைமுறை நடிகர்கள் வந்தாலும் ரஜினியின் படங்கள்தான் பாக்ஸ் ஆஃபிஸில் சூப்பர் டூப்பர் ஹிட்.

அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் நடிகராகவும் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினி கலைஞரை பற்றியும் கலைஞருடனான தன் அனுபத்தை பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்தார்.

இதையும் படிங்க: 80களில் குடும்பப் பாங்கான படங்களில் தெறிக்க விட்ட விசு… எப்படி நடந்ததுன்னு தெரியுமா?

ஒரு சமயம் ரஜினி தன் படத்தின் ப்ரிவியூ ஷோக்காக கலைஞரை அழைத்திருந்தாராம். அந்த நேரத்தில் ஏதோ தேர்தல் நேரமாம். அதனால் ரஜினி தன் வாக்கை பதிவு செய்துவிட்டு தியேட்டருக்கு வர இருந்தாராம். வாக்கைப் பதிவு செய்த ரஜினி வெளியே வர பத்திரிக்கையாளர்கள் அவரிடம் யாருக்கு ஓட்டுப் போட்டீங்க? என்று கேட்டார்களாம்.

அதற்கு ரஜினி மிகவும் வெளிப்படையாக இரட்டை இலைக்குத்தான் என்று சொல்லியிருக்கிறார். இந்த செய்தி அப்போதைய பத்திரிக்கைகளில் தீயாய் பரவி பெரும் விமர்சனத்திற்கும் உள்ளானதாம். உடனே என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த ரஜினி ‘அங்கு வேற கலைஞர் காத்துக் கொண்டிருக்கிறார்’ என நினைத்துக் கொண்டு,

இதையும் படிங்க: சர்ஜரிக்கு பிறகு அத பண்ணல.. இத செஞ்சிருந்தா நல்லா இருந்திருப்பார் – கேப்டன் குறித்து SAC உருக்கம்

தனக்கு குளிர் காய்ச்சல் என்று சொல்லி வர முடியாது என்றும் சொல்லியிருக்கிறார். ஆனாலும் கலைஞர் பரவாயில்லை. நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். வேறு வழியில்லாமல் வந்த ரஜினியிடம் கலைஞர் ‘என்ன குளிர்காய்ச்சலா? சூரியன் அருகில் அமருங்கள் சரியாகிவிடும்’ என சொல்லி சிரித்தாராம்.

இந்த விஷயத்தை நேற்றைய கலைஞர் 100 விழாவில் அந்த நடிகர் யாரென்றே சொல்லாமல் கடைசியில்தான் அந்த நடிகர் ரஜினிகாந்த் என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார் நம்ம சூப்பர் ஸ்டார்.

இதையும் படிங்க: ரஜினி, கமல் நடிக்க வேண்டிய படத்தில் வேற ஹீரோ!.. ஆனாலும் சொல்லி அடித்த பாரதிராஜா…

Next Story